ரனசிங்க பிரேமதாஸாவின் 33வது சிரார்த்த தினம்: சஜித் பிரேமதாஸ தலைமையில் எளிமையான நினைவேந்தல்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸவின் 33 வது சிரார்த்ததின நிகழ்வு நேற்று கொழும்பு 12 புதுக்கடை உயர் நீதிமன் வளாகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள அவரது உருவச்சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் அவரது புதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் மிக எளிமையாக இடம்பெற்றது.
கடந்த காலங்களைவிட மிக எளிமையாக இடம்பெற்ற நிகழ்வில் திருமதி ஹேமா பிரேமதாஸஇ சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள்இ கட்சியின் தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அரசியல் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸவின் உருவச் சிலைக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர். பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் உள்ளிட்ட பிரமுகர்கள் பிரேமதாஸவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அனுவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
இம்முறை கடந்த காலங்களைப்போல் சமய அங்சலி நிகழ்வுகள்இ நினைவுப் பேருரைகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
![]()