எதிர்ப்போரைப் பழிவாங்க 3 சட்டங்களுடன் பாய்கிறது அரசு; தயாசிறி தெரிவிப்பு

நாட்டில் அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அது இன்றும் தீவிரமடையலாம். ஆகவே எதிர்கட்சிகளின் சகல தரப்பினரும் தற்போது ஒன்றிணைய வேண்டும். பேச்சு சுதந்திரத்தை முடக்கி சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருநாகல் நகரில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார் .
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,
அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் உட்பட பொதுமக்களையும் ஆட்சியாளர்கள் விரோதிகளாகவே பார்க்கிறார்கள்.அரசியலில் எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்கள் அரச நிதி மோசடி சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமை சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகிய மூன்று சட்டங்களால் இன்று இலக்கு வைக்கப்படுகிறார்கள்.
அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அது இன்றும் தீவிரமடையலாம். ஆகவே எதிர்கட்சிகளின் சகல தரப்பினரும் தற்போது ஒன்றிணைய வேண்டும். பேச்சு சுதந்திரத்தை முடக்கி சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகளே ஆகவே மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. என்றார்.
![]()