முச்சந்தி

மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவனின் எலும்புக் கூடு அகழ்ந்தெடுப்பு; ஒரு சோடி காலணி,காலுறையும் மீட்பு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவரின் என்புக்கூடு நேற்று அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் அகழ்வு பணிகள் சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் 43வது நாளாக நடைபெற்றது.

அகழ்வு பணிகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

467 என இலக்கமிடப்பட்ட மழை அங்கியை ஒத்த அங்கியுடன் இனங்காணப்பட்ட சிறுவரின் என்புக்கூடு அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதில் இருந்து பிற சான்றுப் பொருட்களாக பொத்தான்களும் மழை அங்கியோடு காணப்பட்ட பொத்தானொன்றும் ஒரு சோடி காலணி மற்றும் காலுறையும் மழை அங்கியும் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

இன்று அது சம்பந்தமான ஆய்வுகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுக்கு பின்னர் அது சம்பந்தமாக கூறக்கூடியதாக இருக்கும் – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button