நாட்டின் தேசிய நிதிப் பாதுகாப்பு ஆபத்தில்!; உடனடியாக சைபர் பாதுகாப்பை உறுதி செய்யவும்

25 இலட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் தவணையை நாடும் மக்களுக்கும் இழந்துள்ளனர். இந்த கடன் தொகை காணாமல் போயுள்ளமையினால், உரிய தரப்புக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்தாமலே காணப்பட்டு வருகின்றன. கடன் தவணை இவ்வாறு இழக்கப்பட்டதன் மூலம், உண்மையிலேயே நமது நாட்டின் தேசிய நிதி பாதுகாப்பு தொடர்பாக பாரதூரமான அச்சுறுத்தல் நிலை உருவாகி காணப்படுகின்றன. இது வெறுமனே நடந்த சம்பவமல்ல. இங்கு திருட்டும் மோசடியும் நிதி முறைகேடுகளுமே நடந்துள்ளன. இதன் பிரதான அடிப்படைக் காரணங்களை கண்டறிவது அனைவரினதும் பொறுப்பாக காணப்படுவதனால், இந்த நிதி திருட்டில் சம்பந்தப்பட்ட சகலரையும் கண்டுபிடிப்பதற்கு அரசாங்கம் பக்கசார்பற்றதும் வெளிப்படையானதுமான விசாரணையை முன்னெடுப்பது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்துள்ள அவர்,
இந்த விசாரணையின் மூலம் பொறுப்பும் பொறுப்புக்கூறலையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். மூல காரணங்களை கண்டறிவதுடன் மட்டுமல்லாது, இதில் முக்கிய சூத்திரதாரிகளை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தேவையான வழிவகைகளைச் சொய்வதும், அதற்கான சூழலை உருவாக்குவதும் இங்கு தேசிய கடமையும் பொறுப்புமாக அமைந்து காணப்படுகின்றன.
அரசாங்கமும் ஜனாதிபதியும் சகலரும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விசேட தேசிய வேலைத்திட்டமொன்றை வகுக்க வேண்டும். இந்த 25 இலட்சம் டொலர் இழப்புடன் மேலும் பல வெளிநாட்டு கொடுப்பனவுகள் தொடர்பான செய்திகளும் வெளிவருவதால், இந்த நிதி நிர்வாகத் துறையில் நிகழ்ந்த சரிவையும் தவறையும் ஜனாதிபதி தலைமையிலான அரசே பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு சைபர் பாதுகாப்புக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க வேண்டும். நாட்டின் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் .
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தவறுகளை செய்திருக்கும் இந்த தருணத்தில், எதிர்க்கட்சி தலைமையில் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் மூலம் இந்த மோசடி சம்பவம் தொடர்பான சகல விசாரணைகளையும் வெளிப்படையாக விசாரித்து நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதோடு இந்த கொடுப்பனவு செலுத்தப்படாமையினால் ஏற்பட்ட இறையாண்மை கடன் தவறலின் (Sovereign Default) காரணமாக சர்வதேச மட்டத்தில் அது எவ்வாறு எம்மை பாதிக்கும் என்பது தொடர்பாக அரசாங்கம் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
சர்வதேச கடன் தவணைத் திருப்பிச் செலுத்தல் நடவடிக்கையின் போது நடந்த இந்த மோசடி காரணமாக சர்வதே நிதி தரவரிசை மற்றும் ஏனைய பரிவர்த்தனைகளுக்கும் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டனவா என்பது தொடர்பாக அரசாங்கம் நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும். இது ஜனாதிபதி தலைமையிலான அரசின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார் .
![]()