முச்சந்தி

இலங்கையில் தரையிறங்கியது புதிய ஏர்பஸ் விமானம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330- 200 விமானம் இன்று புதன்கிழமை (04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

புதிய ஏர்பஸ் விமானம் பிரான்ஸின் சார்ட்ரூக்ஸ் விமான நிலையத்தில் இருந்து 11 மணிநேர பயணத்தின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

புதிய ஏர்பஸ் விமானமானது, தலைமை விமானி மற்றும் விமான பொறியிலாளர்கள் உட்பட 10 பேருடன் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானம் பொதுமக்கள் பார்வைக்காக பாணந்துறை, மொரட்டுவை பகுதிகளைக் கடந்து கொழும்பு துறைமுக நகரத்தின் ஊடாக 1,000 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானம் இன்று காலை 10.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

புதிய ஏர்பஸ் விமானத்தில் 248 பொருளாதார வகுப்பு (Economy Class  ) ஆசனங்களும் , 18  வணிக வகுப்பு ( Business Class ) ஆசனங்களும் காணப்படுகின்றன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவையை வலுப்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் முகமாக புதிய விமானம்  உள்ளது.

புதிய ஏர்பஸ் விமானத்தை வரவேற்கும் நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகளின் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு,  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் தலைவர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button