கவிதைகள்

“எப்போதும் வாழ்க்கை இன்பமாய் இருக்கும்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

சின்னத் தனங்கண்டால் சீறிவிட  வேண்டும்
சீரியசெயல் கண்டால் சிறப்புச்செய்ய வேண்டும்
மன்னிக்கும் நிலைவந்தால் மன்னிக்க வேண்டும்
மாண்பினை எப்போதும் மறந்துவிடல் ஆகாது
 
மற்றவர் மனமுடைய வைப்பாரைக் கண்டால்
கிட்டவே போகாமல் விலக்கிவிடல் வேண்டும்
வில்லங்கம் வீண்வாதம் செய்வோரைக் கண்டால்
மெல்லவே வேறுபக்கம் பார்திடல் வேண்டும்
 
பிடிவாதம் எதிர்வாதம் செய்வார்கள் தம்மை
எப்பவும் நட்பாகக் கொண்டுவிடல் ஆகாது
சிந்தித்துச் செயலாற்றும் சிறப்புடையார் தம்மை
எப்பவும் பக்கத்தில் வைத்திருத்தல் சிறப்பே
 
கடுங்கோபம் கடும்பகை கயமைக் குணமாகும்
கயமைக்குணம் எல்லோரின் வாழ்வையே அழிக்கும்
பக்குவமும் பணிவும் நிறைந்துமே இருந்தால்
எப்போதும் வாழ்க்கை இன்பமாய் இருக்கும்  !
Screenshot

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

   மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண் … அவுஸ்திரேலியா 

Loading

One Comment

  1. “பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
    பயம் கொள்ளலாகாது பாப்பா
    மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா ”
    என்ற பாரதியாரை பின்பற்றி வாழும் அறிஞருக்கு வாழ்த்துக்கள் .வணக்கங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button