முச்சந்தி

பாம்பு – கீரி போன்று இருந்தோர் உள்ளூராட்சித் தேர்தலின் பின் நண்பர்கள்! ஆளுந்தரப்பு கிண்டல்

கடந்த காலங்களில் பாம்பு – கீரி போன்று இருந்தவர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் பின்னர் நண்பர்களாகியுள்ளார்கள். இவர்களின் உண்மை தன்மையை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தகுதி மற்றும் போட்டி பரீட்சை ஊடாக மாத்திரம் அரச சேவைக்கு புதிய நியமனங்கள் இனி வழங்கப்படும். 30 ஆயிரம் அரச நியமனங்களை வழங்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய துறைகளுக்கு 15 ஆயிரம் பேரை முதற்கட்டமாக இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டு மக்களின் தனிப்பட்ட விடயங்கள் பற்றி பேசுவதற்கு அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை இல்லை என்று தற்போது முதலை கண்ணீர் வடிப்பவர்கள் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியை மறந்து விட்டார்கள்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இல்லாதொழித்தவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.

கடந்த காலங்களில் பாம்பு – கீரி போன்று இருந்தவர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் பின்னர் நண்பர்களாகியுள்ளார்கள்.

மிகுதியாகவுள்ள உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் நிச்சயம் ஆட்சியமைப்போம். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button