இந்தியா

அகமதாபாத் ஏர் இந்தியா வானூர்தி விபத்து ; விசாரணையின் தற்போதைய நிலை என்ன?

அஹமதாபாத்தில் இடம்பெற்ற ஏர் இந்தியா வானூர்தி விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என இந்திய மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் வழங்கியுள்ளதுடன், இன்னும் ஆறு வாரங்களுக்குள் விபத்து தொடர்பான விசாரணை முழுமையாக நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளது.

அகமதாபாத் ஏர் இந்தியா வானூர்தி விபத்து ; விசாரணையின் தற்போதைய நிலை என்ன? | Ahmedabad Air India Plane Crash Status Investigat

விசாரணைப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதன் பின்னர் தயாரிக்கப்படும் விரிவான அறிக்கை ஒக்டோபர் மாதத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

அஹமதாபாத் ஏர் இந்தியா வானூர்தி விபத்துக்கான காரணங்களைக் கண்டறியும் நோக்கில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button