ஜே.வி.பி.யின் பெலவத்த அலுவலகத்திற்கு ஏற்றவாறு செயற்படும் பொலிஸ் மா அதிபர்; நாமல் சாடல்

தற்போதைய பொலிஸ்மா அதிபர் ஜே.வி.பியின் பெலவத்த அலுவலகத்திற்கு ஏற்றவாறு செயற்படுகின்றார். ஆனால் கடந்த காலங்களில் இவ்வாறு அரசியல் கட்சிகளுக்கு கடைக்குச் சென்ற பொலிஸ்மா அதிபருக்கு என்ன நடந்தது என்பதனை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்விக்கான செலவினத் தலைப்பு மீதான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ எம்.பி இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது இங்கு வெறும் பேச்சாக மட்டும் இருக்கக்கூடாது. அதற்காக ஒதுக்கும் 100 மில்லியன் ரூபாவில் எவ்வளவு தொகையை ஹெக்கர்கள் கொண்டு போவார்ககள் என்று தெரியவில்லை.
கடந்த டித்வாவின் போது ஜனாதிபதி இந்த பாராளுமன்றத்தில் வரம்பில்லாத வாக்குறுதிகளை வழங்கினார். அவை நடக்கவில்லை. பல மாதங்கள் கடந்துவிட்டன. இரண்டாவது மழையும் வந்துவிட்டது. சில பிரதேசங்களில் வீடுகளுக்கு போக வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த போது அதிகாரிகள் பலவந்தமான அந்த மக்களை மீள அங்கு குடியேற்றினர். இப்போது அந்த வீடுகளும் கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு யார் பொறுப்பு கூறுவது.
அத்துடன் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்று கேட்கின்றோம். இந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சாதாரண வீடயமாக பார்க்க வேண்டும்.
இதேவேளை காணி பிரச்சினை விடயத்தில் அரசாங்கத்திடம் காணிகள் இல்லையென்றும் விகாரைகள், தேவாலயங்களுக்கு வேண்டியளவுக்கு காணிகள் உள்ளன என்றும் கூறுகின்றனர். வேண்டுமென்றால் அது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும்.
இப்போது நிவாரணங்கள் தொடர்பில் கதைக்கும் நீங்கள், விவசாயிகளுக்கு வழங்கும் தீர்வு என்ன? இன்று விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் அமைப்புகள் பாதிப்புகளுக்கு எதிராக வீதிக்கு இறங்குகின்றனர். அவர்கள் உங்களால் வழிநடத்தப்பட்டவர்களே. அவர்கள் இப்போது வீதிக்கு இறங்குகின்றனர்.
பாராளுமன்றத்தை தீ வைக்க வந்த கட்சியின் நீதி அமைச்சர் இருக்கும் அரசாங்கமும் புரிதலுடன் பொய்களை கூறும் அரசாங்கமும் இதுவாக இருக்கின்றது. நீங்கள் முதலில் அரசாங்கம் போன்று நடந்துகொள்ளுங்கள். முழுமையாக பொலிஸ் அரசியல்மயமாகியுள்ளது. பொலிஸ்மா அதிபர் பெலவத்த அலுவலகத்திற்கு தேவையானவாறே செயற்படுகின்றார்.
அரசியல்வாதிகள் கொடுக்கும் கயிற்றை சாப்பிட வேண்டாம் என்று பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொள்கின்றேன். இதற்கு முன்னர் இதேபோன்று கட்சிகளுக்காக கடைக்கு சென்ற பொலிஸ்மா அதிபருக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் நினைத்துப்பார்க்க வேண்டும். நீங்கள் அதனை ஏற்றுக்கொள்வதை போன்று உங்களுக்காக கடைக்கு போகும் பொலிஸ்மா அதிபர் போகக் கூடாது. நீங்கள் உங்கள் பொலிஸ்மா அதிபரை நிர்க்கதியாக்கக்கூடாது. இறுதிக் காலம் ஆகும் போது நடக்க வேண்டியது நடக்கும். புரிதலுடன் பொய்களை கூற முடியும். தேவையானவாறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும். ஆனால் இறுதியில் அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் ராஜபக்ஷக்களின் வேலையென்று கொக்கரிக்கக்கூடாது. நாங்கள் உங்களை போன்று பின் கதவால் போகின்றவர்கள் அல்ல என்றார்.
![]()