பலதும் பத்தும்

அரிதாக மலர்ந்த சேனைக்கிழங்கு பூ

நெல்லை டவுன் பாறையடி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகராஜ். இவரின் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட சேனைக்கிழங்கு செடியில் அரிதாகப் பூ பூத்துள்ளது.

தாவரவியல் ரீதியாகச் சேனைக்கிழங்கு அடிக்கடி பூக்காத தாவரமாகும். இதன் பூ பழுப்பு மற்றும் ஊதா நிறம் கலந்த பெரிய கிண்ணம் போன்ற தோற்றத்துடன், நடுவில் தடிமனான கம்பு போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும்.

இந்த மலர் பொதுவாக 4 முதல் 5 நாட்கள் மட்டுமே நீடிக்கும். மகரந்தச் சேர்க்கைக்காக ஈக்களை ஈர்க்கும் நோக்கில், பூ பூத்தது முதல் சில நாட்களில் அழுகிய இறைச்சியைப் போன்ற கடுமையான நாற்றத்தை வெளியிடும் தனித்தன்மையும் கொண்டது.

இந்த நிலையில், இந்தப் பூ அறுவடை செய்யாமல் விடப்பட்ட சேனைக்கிழங்கு அழுகிய பிறகு, அதிலிருந்து வந்த செடியில் பூத்த பூவாகும். இந்தப் பூவைக் காண்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் சண்முகராஜின் தோட்டத்திற்கு வந்து பார்வையிட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button