இலங்கை

செம்மணியில் அகழாய்வு: மேலும் இரு சிறுவர்களின் என்புக்கூடுகள் அடையாளம்! மொத்த எண்ணிக்கை 414

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின் மூன்றாம் பகுதி பணிகள்  (15) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 32 நாட்கள் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 23ஆம் திகதி அவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாள் அகழாய்வு இன்று மீண்டும் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய அகழாய்வின் போது புதிதாக இரண்டு என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை இரண்டும் சிறுவர்களுக்குரிய என்புக்கூடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு என்புக்கூட்டு குவியல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

எனினும், இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட எந்த என்புக்கூடும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து, செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மொத்தம் 87 நாட்கள் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது மொத்தமாக 414 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 409 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button