பலதும் பத்தும்

நடிகர் விஜய் பாடலுக்கு நடனமாடிய ஆசிரியை பணி நீக்கம்!

இந்தியாவில் ஏப்ரல் 23 ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடபெறவுள்ல நிலையில், தேர்தர்கள் சூடு பிடித்துள்ளது.

திமுக மற்றும் தவெக இடியில் கடும்போட்டி நிலவும் நிலையில், விஜய் பாடல்களை பாடவோ ஒலிபரப்பவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் நடனம் ஆடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பின்னையூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் முன்பு சங்கரநாதர் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

தற்போது வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஒரத்தநாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, விழா மேடையில் ஒலிபரப்பப்பட்ட விஜய் திரைப்பட பாடலுக்கு நடனமாடினார். அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியில், அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருக்கும் ஒருவர் நடனமாடியதற்காக, கிருஷ்ணவேனி பணியிடை நீக்கம் செய்து பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் பங்கேற்று நடனமாடியதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *