பலதும் பத்தும்

சிகிச்சை பெறும் தாய்க்காக புல்லாங்குழல் வாசித்த முன்னாள் முதலமைச்சர்!

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரான அர்ஜுன் முண்டா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயின் அருகில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்த சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜுன் முண்டாவின் தாயார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், வைத்தியசாலையில் உள்ள தாய்க்குத் தைரியமளிக்கவும் அவரது மனதை மகிழ்விக்கவும் எண்ணிய அர்ஜுன் முண்டா, தாயின் கட்டிலுக்கு அருகில் அமர்ந்து இனிய இசையை புல்லாங்குழலில் இசைத்துள்ளார்.

அந்த மெல்லிய இசையைக் கேட்டதும், நோயின் வேதனையிலும் அவரது தாயின் முகத்தில் புன்னகை மலர்ந்துள்ளது.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளியாகப் பகிர்ந்துள்ள அர்ஜுன் முண்டா, அதில் உணர்ச்சிப்பூர்வமான குறிப்பொன்றையும் பதிவிட்டுள்ளார்.

“என் வாழ்வில் கிடைத்த மிகவும் விலைமதிப்பற்ற வரம் அம்மா. அவரது அன்புதான் என் மிகப்பெரிய பலம். அவரது ஆசீர்வாதங்களே எனக்கு என்றும் ஆதரவு. அவரது வாழ்க்கைதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகம்” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தாயின் மீது அவர் காட்டிய இந்த அளப்பரிய அன்பும் பாசமும், இணையவாசிகளிடை பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *