பலதும் பத்தும்

ஸ்பெயினில் ஆடு மேய்க்கும் தொழில்துறைக்கு வெளிநாட்டவர்களுக்கு அழைப்பு

ஸ்பெயினில் மிகவும் தொன்மையான ஆடு மேய்க்கும் தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொழில் வெற்றிடத்தை நிரப்ப ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

ஸ்பெயினின் சிறிய கிராமங்களில் 400 ஆடுகள் கொண்ட மந்தையைப் பராமரிக்கும் பணியில், சூடானைச் சேர்ந்த ஒசாம் அப்துல்முமென் போன்ற இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்கள் நகர்ப்புறங்களுக்குச் சென்றதால், கிராமப்புறங்களில் ஆடு மேய்ப்பதில் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால், குடியேறிகளுக்கு ஐந்து நாள் பயிற்சி அளித்து பண்ணைகளுடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

குடியேறிகளின் உதவி இல்லையென்றால், தமது கால்நடைப் பண்ணைகள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மூடப்படும் என பண்ணை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குடியேறி இளைஞர்களின் வருகையால் ஸ்பெயினின் பாரம்பரிய செம்மறி ஆட்டுப் பால் சீஸ் உற்பத்தி பாதுகாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button