இலங்கை
பல நாடுகளைச் சேர்ந்த 30 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் யாழ் வருகை

பல நாடுகளைச் சேர்ந்த 30 வரையான இராணுவ அதிகாரிகள் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.
இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றுவரும் மேற்படி குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தைப் பார்வையிட்டனர்.
இதன்போது அந்தக் குழுவினரைப் பிரதம நூலகர் மற்றும் உத்தியோகத்தர்கள் வரவேற்று நூலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
அதனைத் தொடர்ந்து இராணுவ அதிகாரிகள் குழுவினர் யாழ்.மாவட்டத்தின் கரையோரக் கிராமங்கள் சிலவற்றுக்கும் நேரில் சென்றனர்.
இதேவேளை, இந்தக் குழுவினர் இன்று புதன்கிழமை (15) நெடுந்தீவுக்குப் பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
![]()