பலதும் பத்தும்

பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்த இரட்டை குழந்தைகள்; யாழில் சோகச் சம்பவம்

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த 21ஆம் திகதி இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தபோது பெண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

ஆண் குழந்தை உயிருடன் பிறந்த நிலையில் 45 நிமிடங்கள் கழித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தைகளின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *