முச்சந்தி
காசாவை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்… சியேனிச பேராதிக்கம் எதுவரை தொடரும்? …. ஐங்கரன் விக்கினேஸ்வரா

காசாவை முழுமையாகக் கைப்பற்றும் பிரதமர் நேதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேல்
பாதுகாப்பு அமைச்சரவை 8/8/25இல் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்திற்கு காசாவை கைப்பற்ற நேதன்யாகு தற்போது உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரவை 8/8/25இல் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்திற்கு காசாவை கைப்பற்ற நேதன்யாகு தற்போது உத்தரவிட்டுள்ளார்.காசாவில் தொடர் பட்டினி:
காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது. காசாவில் பசியில் கதறும் குழந்தைகள் மீது சர்வதேச ஊடகங்களின் கரிசனம் இருக்க, ஊடகப் பார்வையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகப் பார்வையையும் இஸ்ரேலின் பக்கம் திருப்பும் விதமாக, ஒரு வரலாற்றின் கொடூர ஆக்கிரமிப்பு முடிவை நெதன்யாகு அரசு வெளியிட்டுள்ளது.
இதுவரை போரில் தரைமட்டமாக்கியதெல்லாம் போதும், இனி முழுமையாக காசாவை கைப்பற்றிவிடலாம் என்பதை நோக்கி அவர் நகர்ந்து வருவதை உறுதிப்படுத்தும் விதமாகவே, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.அப்பாவி பொதுமக்களை ஏன் பட்டினியில் தள்ளுகிறீர்கள், உணவு நிவாரணப் பொருட்களைத் தடுக்கும் இஸ்ரேலை மனிதம் உள்ள மனிதர்கள் கேள்வி கேட்கும் சூழலில், காசாவில் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடப் போகிறது என்று ஐ.நா. அமைப்புகள் எச்சரிக்கும் வேளையில், காசாவை முழுமையாக கைப்பற்றுவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளமைக்கு உலகளாவிய கண்டனம் எழுந்துள்ளது.
முதலில் காசாவை 1967இல் கைப்பற்றிய இஸ்ரேல்:
காசாவை முதன்முதலில் இஸ்ரேல் 1967ஆண்டு ஆறு நாள் போரில் கைப்பற்றியது. இதற்காக சிரியா, ஜோர்டான், எகிப்து மீது இஸ்ரேல் ஆறு நாட்கள் போர் நடத்தியது. ஜூன் 5, 1967-ல் அப்போதைய இஸ்ரேலிய ராணுவத் தலைவர் இஷாயாகு காவிஷ், காசாவை கைப்பற்றினார். அதுவரை அந்தப் பகுதி எகிப்து கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆனாலும் ராணுவத் தளதியின் உத்தரவை அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மோஷே டயான் எதிர்த்தார். இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களுடன் சர்ச்சைக்குரிய பகுதியைக் கைப்பற்றுவது, ‘குளவிக் கூட்டுக்குள் சிக்குவது போன்றது’ என்றும் விமர்சித்திருந்தார். ஆனால், ராணுவம் முன்னேறி எகிப்திடமிருந்து காசாவை கைப்பற்றியது. பாலஸ்தீன மக்கள் உள்ள பகுதிகளில் ராணுவ நிலைகளை அமைத்து அங்கே யூதர்களை குடியமர்த்தியது. இது பாலஸ்தீன மக்கள் ஒரே இடத்தில் அடர்த்தியாக பலமாக இருப்பதைத் தடுக்கும் உத்தியாக இஸ்ரேல் கையாண்டது.

1970இல் இஸ்ரேலில் ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சி, அங்கே ‘நஹால்’குடியேற்றங்களை அமைத்தது. நஹால் என்பது இஸ்ரேலியப் படைப்பிரிவின் பெயர். அதையொட்டி இஸ்ரேல் காசா ஆக்கிரமிப்புப் பகுதியில் நஹால் குடியேற்றங்களை உருவாக்கியது. அங்கே குடியமர்த்தப்பட்ட மக்கள் விவசாயத்தை பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தாலும் கூட ராணுவத் திறன் பெற்றவர்களாகவும் இருந்தனர்.
2005இல் காசா பகுதியில் இதேபோல் 21 குடியேற்றங்கள் உருவாகின. மொத்தம் 8600 பேர் இருந்தனர். கிட்டத்தட்ட 13 லட்சம் பாலஸ்தீனியர்களுக்கு இடையே இந்த 8100 பேர் ஆங்காங்கே குடியேறியிருந்தனர். பாலஸ்தீன அகதிகள் முகாம்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்க, அத்தியாவசியத் தேவைகள் கூட பூர்த்தியாகாமல் திணறிக் கொண்டிருக்க, அதன் பார்வையிலேயே இஸ்ரேல் ராணுவ உதவியுடன், பாதுகாப்புடன் இஸ்ரேலின் நஹால் குடியேற்றங்கள் பசுமையாக, வளமாக மாறுவது பாலஸ்தீன மக்களை, போராளிகளை கொதிப்படையச் செய்தது.
இதன் விளைவாக 2000இல் போராட்டமாக வெடித்தது. இதனால் இஸ்ரேல் தனது குடியேற்றக் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்தியது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் இடையேயான மோதலைத் தடுக்க குடியேற்றத்தை அப்புறப்படுத்தத் தொடங்கியது.
2005இல் அப்போதைய பிரதமர் ஏரியல் ஷாரோன், காசா, மேற்குக் கரையின் மேற்கே இருந்த அனைத்து இஸ்ரேலிய குடியேற்றங்களையும் கலைக்க உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. யூத மதத் தலைவர்கள், புனித நிலத்தில் உள்ள குடியேற்றங்களை அழிப்பது ஆன்மிகத் துரோகம் என்றும் விமர்சித்தனர்.
காசாவை முழுமையாக கைப்பற்ற திட்டம்:
தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேதன்யாகுவின் ஐந்து கொள்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சரவை 8/8/25இல் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அனைத்து பணயக்கைதிகளையும் திரும்பப் பெறுதல், ஹமாஸை நிராயுதபாணியாக்குதல், காசா பகுதியை இஸ்ரேல் கட்டுப்படுத்துதல், மாற்று சிவில் அரசாங்கத்தை உருவாக்குதல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காசாவின் 75 சதவீதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்ரேலிய இராணுவம், பணயக்கைதிகள் வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டும் பகுதிகள் உட்பட காசவில் மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்றத் தயாராகி வருகிறது.இஸரேலின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கவும், அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் வழங்கவும் காசா முழுவதையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் எடுக்க விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் காசாவை நிரந்தரமாக வைத்திருக்க அவர்கள் விரும்பவில்லை என்றும், அங்கு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை நிறுவி, அதை முறையாக நிர்வகிக்கக்கூடிய அரபுப் படைகளிடம் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைப்போம் என்றும் நேதன்யாகு விளக்கினார்.
இஸ்ரேலின் உண்மையான நோக்கம்:
போருக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலின் உண்மையான நோக்கங்கள் இப்போது வெளிப்பட்டுள்ளதாக ஹமாஸ் கூறியுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ‘இஸ்ரேல் காட்ஸ்’ போரின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை ராணுவம், அரசின் முடிவுகளுக்கு உடன்பட வேண்டியது ராணுவத்தின் கடமை என்றும் தெரிவித்திருந்தார்.
பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த முடிவில் இஸ்ரேல் ராணுவமே முழுமையாக உடன்படவில்லை என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.
டொனால்டு டிரம்ப் நிலைப்பாடு:
காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முயற்சிப்பதாக கூறி
வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.காசாவை இஸ்ரேல் முழுமையாகக் கைப்பற்றுவதை ஆதரிப்பீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட, அது முழுக்க முழுக்க இஸ்ரேலை சார்ந்தது, என்று பட்டும் படாமலும் சொல்லியிருக்கிறார்.
உண்மையைச் சொல்வதென்றால், போரை நிறுத்துவேன் என்று முழுங்கும் டிரம்ப், இதுவரை வெளிப்படையாக இஸ்ரேலுக்கு எவ்வித அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.
இஸ்ரேலிய மக்கள் எதிர்ப்பு:
காசாவில் யூதர்களை மீள்குடியேற்றம் செய்ய, இஸ்ரேலிய மக்களில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக அது இல்லை. காசாவில் சிக்கியுள்ள பிணைக் கைதிகள் இன்னும் உயிருடன் இருக்கலாம். அவர்களை மீட்பதைத்தான் பிரதமர் செய்ய வேண்டுமே தவிர ஹமாஸை எரிச்சலூட்டும் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஆயினும் இஸ்ரேலிய மக்களில் ஒரு சிலர், காசாவுக்குள் மீள்குடியேற விரும்புகின்றனர். யூத மதம் சார்ந்த நம்பிக்கைகள், அரசியல் நிலைப்பாடுகள் என பல காரணங்களால் உந்தப்பட்ட அவர்கள் நெதன்யாகுவின் முடிவை ஆதரிக்கின்றனர்.
ஐ.நா. சபை எச்சரிக்கை:
இஸ்ரேலின் புதிய திட்டத்திற்கு, பல நாடுகளின் கண்டனங்களையும், ஏன் இஸ்ரேல் ராணுவத் தலைமைத்துவத்தின் சில எதிர்ப்புகளையும் புறக்கணித்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல்-காசா மோதல் மேலும் தீவிரமடையும் என சர்வதேச சமூகத்தில் அச்சம் நிலவுகிறது.
இது குறித்து இஸ்ரேலின் ராணுவ துணைத் தலைவர் ஈயல் ஸமீர், இது பெரிய உயிரிழப்புகளையும், மனிதநேயம் சார்ந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார். அவரின் அபிப்பிராயம் பாதுகாப்புக் குழுவில் புறக்கணிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையால் காசா நகரில் உள்ள சுமார் ஒரு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்யும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசாவை முழுமையாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்றும், மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் ஐ.நா.சபையின் செய்தி தொடர்பாளர் Farhan Haq தெரிவித்துள்ளார்.ஆயுத உதவியை நிறுத்தும் ஜெர்மனி:
காசா கைப்பற்றும் திட்டத்திற்கு உலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது. அதேவேளை ஆயுத உதவியை நிறுத்துவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள காசாவில் இன்னும் நிம்மதியற்ற சூழலை உள்ளது.
இஸ்ரேலுக்கு வழங்கிவந்த இராணுவ தளவாடங்களின் ஏற்றுமதியை ஜெர்மனி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. காசாவில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தாங்கள் ஏற்றுமதி செய்யும் ஆயுதங்கள் அங்கு பயன்படுத்தப்படலாம் என்ற நிலையில் முடிவை எடுத்துள்ளதாக ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
காசா நகரை முற்றிலுமாக ஆக்கிரமிக்கப் போவதாக இஸ்ரேல் தெரிவித்ததையடுத்து ஜெர்மன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசா மக்களின் நிலைமை மிகுந்த கவலை அளிக்கிறது என்றும் காசா மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைய இஸ்ரேல் உடனடியாக முழு அனுமதியளிக்க வேண்டும்.
இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு ஜெர்மன் அதிபர் மெர்ஸ் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் நட்பு நாடான ஜெர்மனியின் இந்த முடிவு, காசா போரில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
![]()