முச்சந்தி

கடந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கமே மோசம்

இந்த அரசாங்கமானது கடந்த கால அரசாங்கங்களை விட மோசமான அரசாங்கமாக உள்ளது. ஏனென்றால், இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியற்தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வினைப் பற்றி பேசும் போது அதை ஒரு இனவாதம் எனக் கூறுகின்றது. அமைச்சர் பிமல்ரட்னநாயக்க எ ங்களை தென்னிலங்கையில் இனவாதிகளாக காட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன் சபாநாயகரும் நடுநிலையாக செயற்படுவதில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,வாழைச்சேனையில் உள்ள இலங்கை போக்குவரத்துச்சபைசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சாணக்கியன் எம்.பி. அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.இந்த விஜயத்தில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் இணைந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் நடத்தியிருந்தார்.இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்த சாணக்கியன் எம்.பி. மேலும் கூறுகையில்,

மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசுகின்ற போது அதனை இனவாதமாக காட்டி பேசுவதை தடைசெய்வது ஒரு கவலையான விடயம். சிறந்த உதாரணமாக கடந்த 30 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி சம்பந்தமான கூட்டம் இடம்பெறவிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தின் அங்குள்ள மக்களின் எதிர்காலம் தொடர்பாக ஆராயப்படுகின்ற கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பாடாமையினை ஏற்றுக்கொள்ள முடியாது.
எமது மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு முயாற்சி எடுக்கின்ற போது இந்த அரசாங்கம் தடையாக உள்ளது. இந்த அரசாங்கமானது கடந்த கால அரசாங்கங்களை விட மோசமான அரசாங்கமாக உள்ளது. ஏனென்றால், இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியற்தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வினைப் பற்றி பேசும் போது அதை ஒரு இனவாதம் எனக் கூறுகின்றது. அண்மையில் மாகாண சபைகளுக்கு பொறுப்பான அமைச்சர் புதிதாக எ ல்லை நிர்ணயம் செய்யப்போவதாக கூறுகின்றார். நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்ட மூலத்தினை பயன்படுத்தவில்லை என்பதால் தான் எல்லைநிர்ணயம் செய்யப்போகின்றார்கள். ஒரு புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை கொண்டுவரப்போகின்றார்கள்.

அதேவேளை ஊடக அறிக்கையில் தாங்கள் ஒரு புதிய சட்டமூலம் கொண்டுவரப் போவதாக உள்ளது. உள்ளூராட்சி சபைகள் கடந்த இரண்டு வருடங்களாக இயங்கு நிலையில் இல்லாமல் இருந்த காலத்தில் நடைபெற்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்து வருவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகள் வழங்க முடியாத நிலையிலே தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு வந்து இந்த அரசாங்க செயற்படுவதைப் போன்று தான் தெரிகின்றது.

வடக்கு கிழக்கில் அதிகூடிய சபைகள் தமிழரசுக் கட்சியின் கைவசம் இருக்கின்ற போது இப்போது மாகாணசபைகளை வைத்துக்கொண்டு இந்த உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்காக செயற்படுகின்றதா என்ற சந்தேகம் உள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கு தேவையான அனுமதிகளை மாகாண சபைகள் வழங்க வேண்டும். மாகாண சபை இன்மையின் காரணமாக ஆளுநர் வழங்க வழங்க வேண்டியுள்ளது. ஆனால் ஆளுநர் அவற்றை இழுத்தடிப்பு செய்கின்றார். பாராளுமன்றத்தில் எங்களைப்பற்றி அவதூறாகப் பேசுவதையே ஒருவிடயமாக அவைத்தலைவர் வைத்திருக்கின்றார். மாவட்டமட்ட கூட்டங்காளில் பெறப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்த தவறுகின்ற போது பாராளுமன்றத்தில் பேச முற்படுகின்ற போது அதனை தடுப்பதுடன், அவர்களை குழப்புவதாகவும் கூறுகின்றனர்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை சாலையில் 49 பஸ் களில் 23 பஸ்கள் தான் மக்களுக்கான சேவையில் ஈடுபடுகின்றது. 26 பஸ்கள் சேவையில் இல்லாமல் பலவகைப்பட்ட திருத்தங்களில் உள்ளன. அவற்றில் 5 பஸ்கள் விபத்துக்குள்ளாகி அதனுடைய வெளிப்புறம் உடைந்து திருத்தப்படாமல் உள்ளன. 21 பஸ்கள் சின்ன திருத்தங்களுடன் உள்ளன. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து கலந்துகொண்ட கூட்டத்தில் இரண்டு மாதங்களுக்குள் பஸ் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவேன் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு மாதமாகியும் இதுவரையும் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இடம்பெறவில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button