முன்பிருந்த நிலை மீண்டும் வரும் கோதாவின் பெறுமதியை மக்கள் விரைவில் உணர்வர்
கோதாபய ராஜபக்ஷவின் பெறுமதியை நாட்டு மக்கள் மறந்துவிட்டனர் என்றும். முன்பிருந்த நிலைமை மீண்டும் உருவாகும் போது அவரின் பெறுமதியை மக்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தள்ளார்.
அயல் வீட்டார் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒரு வாரகாலமாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த உதயங்க வீரதுங்க வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், நுகேகொட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கோதாபய ராஜபக்ஷ இங்கேயே இருக்கின்றார். தவறு செய்திருந்தால் சட்டமா அதிபரால் ஏன் 9 வருடங்களாக வழக்கு தொடர முடியவில்லை. அழைப்பதும், விசாரிப்பதையும் விடுத்து வழக்கை தொடர்ந்து அதன்மூலம் குற்றவாளிகள் இருந்தால் கண்டுபிடிக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்த கோதாபய ராஜபக்ஷ எப்போதும் சரியானவரே. எனது பிரச்சினையில் மாறுபட்ட கருத்தை கொண்டிருக்கலாம் ஆனால் கோதாபய இருந்திருக்காவிட்டால் நாங்கள் இப்போது விடுதலைப் புலிகளின் கொடியின் கீழேயே இருக்க வேண்டியிருக்கும். இது மக்களுக்கு மறந்துவிட்டது. இன்னும் 8 வருடங்களில் மீண்டும் அது போன்ற யுகம் உருவாகும் நாளில் கோதாபயவின் பெறுமதி மக்களுக்கு விளங்கும் என்றார்.
![]()