பலதும் பத்தும்

இடம்பெயரும் பட்டாம் பூச்சிகள்;எங்கே செல்கின்றன?

பட்டாம்பூச்சிகளை யாருக்குத்தான் பிடிக்காது. அத்தகைய பட்டாம்பூச்சிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்லும் வலசை மிகவும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு.

ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்குச் செல்லும் பட்டாம்பூச்சிகளின் வலசை குறித்து இங்கு வெகு குறைவான மக்களே அறிந்துள்ளனர்.

பட்டாம்பூச்சி வலசையானது ஆண்டுக்கு இரு முறை நடைபெறுகிறது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் துவங்கி, ஜூன் மாதம் முதல் வாரம் தென்மேற்குப் பருவமழைக்கு முன்பும், தென்மேற்குப் பருவமழை முடிந்த பிறகும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து மீண்டும் ஒரு வலசையும் நடைபெறும்.

பருவமழையின் தீவிரத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், உணவு, தங்குமிடம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த வலைசை நடைபெறுகிறது.

மேற்குத் தொடர்ச்சியில் இருந்து வலசை செல்லும் பட்டாம்பூச்சிகளின் மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறையைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகளே மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குத் திரும்பி வரும் என்பது குறிப்பிடத்தக்கது,

வலசைகளின் வகைகள் குறித்துப் பேசும்போது அதன் தலைவர்  பாவேந்தன் தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு வலசைகளைப் பட்டியலிட்டார்.

“நீண்டதூர வலசை, குறைந்த தூர வலசை மற்றும் குறைந்த உயரத்தில் இருந்து அதிக உயரத்திற்குச் செல்லும் வலசை என்று இதில் பல வகைகள் உள்ளன. பருவமழைக்கு முன்னதாக நடைபெறுவது நீண்டதூர வலசையாகவே உள்ளது,” என்று குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்தமட்டில் இந்த பட்டாம்பூச்சிகள் 200 முதல் 300 கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொள்கின்றன.

தமிழ்நாட்டில், பருவமழைக் காலத்தில் நான்கு வகை பட்டாம்பூச்சிகள் மட்டுமே அதிக அளவில் வலசை மேற்கொள்கின்றன. “மில்க்வீட் (milkweed) வகை செடிகளில் முட்டையிடும் டைனேனே (Danainae) துணைக் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள நான்கு வகை பட்டாம்பூச்சிகள் இந்த நீண்டதூர வலசையை மேற்கொள்கின்றன. முறையே, ப்ளூ டைகர் (Blue Tiger), டார்க் ப்ளூ டைகர் (Dark Blue Tiger), டபுள் பிராண்டட் க்ரோஸ் (Double Branded Crows) மற்றும் காமன் க்ரோஸ் (Common Crows) பட்டாம்பூச்சிகள்தான் அவை,” என்று பாவேந்தன் விளக்கினார்.

“இந்த பட்டாம்பூச்சிகளின் வலசையானது ஒரே சீராக இருக்காது. வலசை செல்லும் நூறு பட்டாம்பூச்சிகளை கணக்கில் கொண்டால் அதில் இந்த நான்கு வகையும் சரியான அளவில் இடம் பெற்றிருக்காது. ஓர் ஆண்டு ‘க்ரோஸ்களின்’ எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஓராண்டு ‘ப்ளூ டைகரின்’ எண்ணிக்கை மட்டும் அதிகமாக இருக்கலாம். இது சீரான தன்மையில் இருப்பதில்லை,” என்று அவர் தெரிவிக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button