இலங்கை

கன்னியாயில் புதிதாக எதுவும் கட்டப்படாது; நீதிமன்றில் தொல்லியல் திணைக்களம் உறுதி

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயில் அமைந்திருந்த இடத்திற்கு அருகில் எவ்வித புதிய கட்டுமானங்களும் அமைக்கவில்லை எனவும் தொல்லியல் சின்னங்களை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கையே இடம்பெறுகிறது என தொல்பொருளியல் திணைக்களம் நீதிமன்றில் நேற்ற செவ்வாய்க்கிழமை (22) எழுத்து மூலமாக உறுதி வழங்கியதைத் தொடர்ந்து குறித்த வழக்கானது முடிவுக்கு கொண்டு வர  திருகோணமலை மேல் நீதிமன்றில் இடம் பெற்று வந்த திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயில் தொடர் பான வழக்கு நேற்றைய தினம் எழுத்துமூல அறிக்கைக்காக அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது நீதிமன்றில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளரின் சார்பாக உத்தியோகத்தர் ஒருவரும் நீதிமன் றில் பிரசன்னமாகி அவர்களுடைய அரச சட்டத்தரணியின் ஊடாக தமது எழுத்துமூல அறிக்கையினை நீதிமன்றுக்கு சமர்ப்பித்தி ருந்தனர்.

அதில், குறித்த தொல்லியலுக்குரிய இடத் தில் தொல்லியலை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கை மாத்திரமே இடம்பெறுவதா கவும், புதிய கட்டடங்கள் எவையும் கட் டவில்லை எனவும் குறிப்பிட்டு முழு நீள அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்திருந்தனர்.
இந்த வழக்கில் குறித்த தொல்லிய லுக்குரிய சிதைவுகள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்ற கன்னியா பிள்ளை யார் கோவிலுக்குரிய பகுதியில் எவ்வித கட்டுமானங்களும் கட்டக்கூடாது எனவும் பிள்ளையார் கோவில் கட்டுவதற்காக இன்னுமொரு இடம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு இருதரப்பும் ஏற்கனவே இணங்கிக் கொண்டு இணக்கப்பாட்டின் அடிப்படையில் கடந்த 5 வருடங்களுக்கு
முன்னர் குறித்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தனர்.

எனினும் பின்னர் குறித்த பகுதியில் கடந்த யூலை 22ஆம் திகதி புதிய கட்டுமானங்க ளுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக பிள்ளையார் கோயில் தர்மகர்த்தா திரும தி. கோகி லரமணி கணேசினால் குறித்த வழக்கானது நகர்த்தல் பத்திரத்தின் மூலம் மீள எடுத்து பின்வரும் விண்ணப்பத்தை செய்திருந்தார்.

என்னுடன் 2019 ஆண்டு தொல்பொருள் திணைக்களம் ஒரு உடன்பாட்டிற்கு வந்தது. அதன்படி அந்த தளத்தில் உள்ள தொல்பொ ருள் அடையாளங்களை பேணிப்பாதுகாக்க மட்டும் உடன்பாடு எட்டப்பட்டது. புதி தாக எந்த கட்டுமானங்களும் அமைக்க முடியாது. ஆனால் அதனை மீறி தற்போது புதிய கட்டுமானத்தை தொல்பொருள்
திணைக்களம் அமைக்கின்றது.

இது என்னு டன் செய்து கொண்ட உடன்பாட்டைமீறும் செயலாகும். எனவே இதனை உடனடியாக நிறுத்துமாறு மன்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து சென்ற 31 ஆம் திகதி வழக்கை மன்று விசாரித்த போது, அந்த தொல்பொருள் தளத்தில் உண் மையில் என்ன நடக்கின்றது என்பது பற்றிய எழுத்து மூல அறிக்கையை தாம் தமது தரப் பான தொல்பொருள் திணைக்களத்திடம் பெற்று மன்றில் சமர்ப்பிக்க கால அவகாசம் தருமாறு அரச தரப்பு சட்டத்தரணி வேண் டுகோள் விடுத்தார்.

இந்தருணம் அவ்வாறு அவகாசம் வழங்குவதாயின் அந்த தினம் வரை தற்போது அங்கு மேற்கொள்ளப் படும் நிர்மாணங்கள் இடை நிறுத்தப்பட வேண்டும் என மன்று இடைக்கால தடை ஒன்றை வழங்க வேண்டும் என வழக்காளி கள்தரப்பால் கோரப்பட்டது. அதனை ஏற்று மன்று நேற்று (22) வரை கட்டுமானங்களை இடைநிறுத்தும் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்து.

நேற்றைய தினம் குறித்த வழக்கானது அழைக்கப்பட்டபோது தொல்லியல் திணைக்களத்தினால் அரச சட்டத்தரணி யின் ஊடாக குறித்த பகுதியில் இடம் பெறும் பணிகள் தொல்லியலை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கை மாத்திரமே என எழுத்து மூலமாக உறுதி வழங்கப் பட்டதைத் தொடர்ந்து குறித்த வழங்கை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை எனவும் இதனால் குறித்த வழக்கானது முடிவுக்கு கொண்டு வரப்பட் டுள்ளதாகவும் வழக்காளி சார்பில் முன்னி லையாகி இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *