கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update)

கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு, கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ வட்டாரபால வீதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும், காயமடைந்தவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *