பலதும் பத்தும்

அமெரிக்க கடற்கரையில் முதன்முறையாக முட்டையிட்ட அரிய கடல் ஆமை

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் அரிய வகை ஆலிவ் ரிட்லி கடல் ஆமை ஒன்று முட்டையிட்டுள்ளமை விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கலிபோர்னியாவின் ஆரஞ்ச் கவுண்டியில் உள்ள சீல் பீச் மற்றும் ஹண்டிங்டன் பீச் பகுதிகளில் இந்த அரிய நிகழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் பொதுவாக இந்தியா, மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா உள்ளிட்ட வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளின் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கில் கூட்டமாக முட்டையிடுகின்றன.

அமெரிக்க கடற்கரையில் முதன்முறையாக முட்டையிட்ட அரிய கடல் ஆமை | Sea Turtle Lays Eggs The First Time On Us Beach

எனினும், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் இந்த வகை கடல் ஆமை முட்டையிட்டிருப்பது இதுவே முதன்முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமை முட்டையிட்ட பகுதியை தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) மீன்வளத்துறை அதிகாரிகளும், உள்ளூர் வனவிலங்கு பாதுகாப்பு குழுவினரும் அடையாளம் கண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

முட்டைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, அவை காணப்பட்ட பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முட்டைகள் பொரிப்பதற்கு சுமார் 45 முதல் 60 நாட்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குஞ்சுகள் பாதுகாப்பாக கடலைச் சென்றடையும் வரை அப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரிய நிகழ்வு, பருவநிலை மாற்றம் மற்றும் கடல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களிலும் இனப்பெருக்க முறைகளிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கவனம் செலுத்தச் செய்வதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *