முச்சந்தி
பிரபல இலக்கியவாதி மு. சிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் பிரபல இலக்கியவாதியும், தொழிற்சங்க மற்றும் அரசியல் ஆளுமையுமான மு. சிவலிங்கம் (24) காலமானார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான அவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த அவர், சிறுகதைகள், நாவல்கள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் திறனாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
அவரது ‘ஒப்பாரி கோச்சி’ சிறுகதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
மு. சிவலிங்கத்தின் மறைவு மலையக சமூகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது.
![]()