திலீபனின் வெண்கலச் சிலையை அடித்து நொறுக்குவதற்கு இரகசிய சதித் திட்டம்

நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அவரது 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்இடம்பெறும் போதுநினைவேந்தலை சட்டரீதியாக குழப்புவதற்கு ஆளும்கட்சியான ஜேவிபியினர் பல வழிகளில் தீவிரமாக முயற்சி செய்தார்கள். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தனர்.
ஆனாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால், நினைவேந்தல் நிகழ்வு முடிவடைந்த பின்னர் நல்லூரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தியாகதீபம் திலீபனின் வெண்கலச் சிலையை அடித்து நொறுக்குவதற்கு இரகசிய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக எங்களுக்குக் நம்பகமான தகவல் கிடைத்துள்ளது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் பல கட்சிகளின் பினாமியாக வலம் வந்தவரும், நல்லூரை இடிப்பேன் என்று கூறிய நபருமான ஒருவர் தற்சமயம் அமைச்சர் சந்திரசேகரின் அடியாளாக மாறியுள்ளதாகவும் எங்களுக்கு நம்பத் தகுந்த தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் சேர்ந்து திலீபனின் வெண்கலச் சிலையை அடித்து நொறுக்கி அற்றியபின்னர் அந்தப் பழியை வேறு தரப்புக்கள் மேல் போடுவதற்கும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக எங்களுக்கு அறியக் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்
![]()