திடீர் உடல்நலக் குறைவு; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கை அமரன்

திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைக் கொண்ட கங்கை அமரன், தற்போது புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அப் படத்துக்கான படப்பிடிப்புக்கள் சிவகங்கை சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது.

இந்நிலையில் மானாமதுரையில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்ட கங்கை அமரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

முதலுதவிக்காக சிவகங்கை அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *