பாடசாலை கழிவு தொட்டியில் விழுந்து மாணவி மரணம்!

தமிழகத்தில் பாடசாலை ஒன்றின் எல்கேஜி மாணவி பாடசாலை கழிவு தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் பாடசாலையின் தாளாளர் உள்ளிட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பாடசாலையில் நேற்று கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக அவரின் பெற்றோர் பழனிவேல், சந்தேக மரணம் என விக்கிரவாண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விக்கிரவாண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேக மரணம், பணியில் அஜாகரத்தையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பாடசாலை தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரையும் நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்து விழுப்புரம் மகளிர் பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.

குழந்தையின் உடல் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும்  பாடசாலை நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் அப்பகுதி மக்கள் போராட்டம் செய்து வந்த நிலையில்  பாடசாலைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *