அதிகாலையில் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 பேரே இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (4) அதிகாலை ஓர மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பேர் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கப்பரதோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனக் கூறியுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *