வெடித்து சிதறிய வாகனம்; வாகனசாரதி அமெரிக்க இராணுவத்தின் விசேட பிரிவை சேர்ந்தவர்

லாஸ்வெகாசில் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே வெடித்துசிதறிய டிரக் வண்டியின் வாகனச்சாரதி அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிபவர் என விசாரணைகளை மேற்கொள்ளும் தரப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை செலுத்தியவர் மத்தியுஅலன் லிவல்ஸ்பேர்கெர் இவர் அமெரிக்க இராணுவத்தின் விசேட படைப்பிரிவான கிறீன் பெரெட்டில் பணியாற்றியவர் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விசேட படைப்பிரிவின் சிரேஸ்ட தரத்தில் உள்ள ஒருவர் ஜேர்மனியில் பணியில் உள்ள இவர் சம்பவம் இடம்பெற்றவேளை விடுமுறையில் இருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரணித்த வேளை அவர் விடுப்பிலிருந்தார் என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் எனினும் அவர் தன்னைதானே சுட்டுதற்கொலை செய்து கொள்ள முயன்றவேளை உயிரிழந்தார் என்பதை தெரிவிக்கவில்லை.

கிறீன்பெரெட் என்பது அமெரிக்காவின் விசேட படைப்பிரிவு கெரில்லா அமைப்புகளிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு பெயர் பெற்றது.

லாஸ்வெகாசில் டிரம்பின் ஹோட்டலிற்கு முன்னர் டிரக்வெடித்து சிதறுவதற்கு முன்னர் அதிலிருந்தவர் தன்னைதானே சுட்டுக்கொண்டார் என லாஸ்வெகாசின் ஷெரீவ்  தெரிவித்துள்ளார்.

நெவாடாவின் லாஸ்வெகாஸில் உள்ள டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே எரிபொருட்கள் பட்டாசுகள் நிரம்பிய வாகனம் வெடித்து சிதறியது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வாகனத்தை செலுத்திவந்தவர் உயிரிழந்துள்ளார் பலர் காயமடைந்துள்ளனர்.

கொலராடோவில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனம் வெடிவிபத்து இடம்பெறுவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னர் லாஸ்வெகாஸிற்குள் நுழைந்துள்ளது. டிரம்பின் ஹோட்டலின் முன்னாள் நிறுத்தப்பட்ட வாகனத்திலிருந்து புகைவெளியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனம் ஹோட்டலின் முன்வாயிலில் நிறுத்தப்பட்டிருப்பதையும் வெடிப்பதற்கு முன்னர் ஒரு பக்கமாக சரிவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அந்த வாகனம் வெடித்துசிதறும்போது அதிலிருந்து வாணவேடிக்கைகள் பல திசைகளிற்கும் செல்வதை காணமுடிகின்றது

வாகன வெடிப்பை தொடர்ந்து பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் முற்றாக எரியுண்ட வாகனத்தையும் காணமுடிகின்றது.

இதேவேளை இந்த சம்பவம் நியுஓர்லியன்சில் நபர் ஒருவர் பொதுமக்கள் மீது வாகனத்தால் மோதிய சம்பவத்துடன் தொடர்புடைய சம்பவமா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதியும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *