இரட்டை விருந்துக்கு தயாராகும் அஜித் ரசிகர்கள்: குட் பேட் அக்லி பட 2 ஆவது லுக் போஸ்டர்
குட் பேட் அக்லி படத்தின் 2வது போஸ்டருடன்,அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரியில் அஜித்தின் துணிவு படம் ரிலீசான நிலையில் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரது அடுத்த படம் ரிலீஸ் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு விடாமுயற்சியும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி படமும் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இரு மாத இடைவெளியில் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
தன்னுடைய ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றாமல் அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்ய அஜித் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.
இடையில் தன்னுடைய பேஷனையும் துரத்தி வருகிறார். அவரது அடுத்தடுத்த பைக் வீடியோக்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

![]()