சிங்கப்பூரில் சிலகாலம்!… 25…. ஏலையா க.முருகதாசன்.

„முதலிலை உங்கடை முதுகிலை கிடக்கிற ஊத்தையைப் பாருங்கோ’ என்று மச்சாளின் மகள் சொன்னது எனக்குச் சுருக்கென்று தைச்சு விட்டுது.
என்னதான் யோகமலரைக் காதலிச்சு அவளுக்கு தாலிகட்டும் நிலைக்கு காலம் இழுத்துச் சென்றாலும்,மனச்சாட்சியின் எச்சரிக்கை இருக்கத்தான் செய்கிறது.
நான் கல்யாணம் செய்தவன் எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதையும் யோகமலர் தெரிந்திருப்பதுடன் எனது வேலை ஒப்பந்தம் முடிஞ்சவுடன் ஊருக்குப் போவதை ஏற்றுக் கொண்டவளாகவும் எனது மனைவியை அக்கா என்று பாசத்தோடு அழைப்பவளாகவும்,நீங்கள் இருக்கும் வரை எனக்கு கணவனாக வாழுங்கள்,நீங்கள் ஊருக்குப் போவதற்கிடையில் உங்கள் மடியிலேயே நான் செத்திடுவேன் என்று சொல்வதும் எனதுn மனசைக் குழைந்து கொண்டேயிருந்தது.
ஏதோ நடக்கிறது நடக்கட்டும் என்ற நினைப்புத் தோன்றிய போது „மச்சாளின் மகளிடம் இப்படிப் பொடியங்கள் உங்களிட்டை வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன போது அவள் வெடுக்கென்று’ அது எனக்குத் தெரியும் „ என்று வேகமாகச் சொல்லியதைக் கவனித்த போது அவளும் சிக்கலில் மாட்டப் போகிறாளே என யோசிக்கத் தொடங்கினன்.
பல்வேறுபட்ட சம்பவக் கலவையின் நினைப்புடன் பூன்லேறைவில் உள்ள வீடு நோக்கி பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தன்.
ஆரம்பித்திலிருந்தது போல எனது நண்பர்கள் என்னோடு பெரிதாகக் கதைப்பதுமில்லை, எனது விசயத்தை நோண்டுவதுமில்லை.சில வேளை நானில்லாத வேளைகளில் அவர்களின் வாயில் நான் பேசுபொருளாகவும், கண்டனத்துக்கு உரியவனாகவும், விமர்சனத்துக்குரியவனாகவும் இருக்கிறானோ தெரியாது.
அவர்களுக்கும் எனக்கும் இடையில் இடைவெளி கூடிக் கொண்டு போவதை உணர்ந்தேன்.வேறு வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள் ஒன்றாக விமானத்தில் வந்தவர்கள் என்பதுதான் இவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு என்று எனது மனமும் மூளையும் யோகமலருடனான இணைவை உறுதிப்படுத்தியது.
யோகமலர் அடிக்கடி சொல்லியது போல, அவளைவிட்டு நான் வருவதற்கு முன்னரே அவள் இறந்தது எனக்கு இன்றளவும் நினைக்கும் போதெல்லாம் வேதனையாகத்தான் இருக்கிறது.
நான் பூன்லேறைவில் இறங்கி வீட்டுக்குப் போகும் போது அடுத்த அறையில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடியிருந்து கலகலப்பாக பேசியது எனக்குக் கேட்டது.
போய் அவர்களின் அறையை எட்டிப் பார்த்தேன்.சச்சி என்பவர் பொஸ் படம் எப்படி என்றார்.நல்ல படம் என்றன்.’எனக்கென்றால் கமலின்ரை படம் என்றால் பிடிக்காது.எனக்கு பாக்கியராஜின் படந்தான் பிடிக்கும் என்றார் இராஜரட்ணம் என்ற நண்பர்.
நூன் படத்துக்குப் போவதாக ஞானசேகரத்திடமும் சூரியகுமாரிடமும் சொல்லியிருந்தன், அதனாலதான்; அவர்கள் படம் பற்றி விசாரித்தனர்.
உங்களோடை வேறை யாரேனும் வந்தவையோ என்று கேட்க „மச்சாளின்ரை மகள் வந்தவர்’ என்று சொல்ல,’பொஸ் முன் கட்டிட பிள்ளையளோடை போகியிருக்கலாம் என்று
இவங்கள் கதைச்சுக் கொண்டிருந்தவங்கள் என்று ஞானசேகரம் சொல்ல „ நான் ஏன் அவையோடை போறன் மச்சாளின்ரை மகள் கூட்டிக் கொண்டு போகச் சொன்னவள்’ என்று கதையை முடிச்சு நான் எனது அறைக்கு வந்து உடுப்பை மாத்திப் போட்டு, குளிக்கப் போவம் என்று ஆயத்தப்படுத்த, அறைக்குள் வந்த ஞானசேகரம் „பொஸ் இவ்வளவு நேரமும் உங்களைப் பற்றித்தான் கிண்டலடித்துக் கதைச்சவை,மலேசியன் கேர்ளோடை படத்துக்கு போளயிருக்கலாம், இல்லாட்டி முன் பில்டிங் விமலாவோடை போயிருக்கலாம்’ என்று கதைச்சவை என்றான்.
அதற்கு நான் கோபப்பட வேண்டிய அவசியமே இல்லை.என்னைப் பற்றி கதைக்க நீங்கள் யார் என்று அவர்களைக் கேட்க முடியாது.கேட்டு கதையை வளர்க்கத் தேவையுமில்லை.என்ன இருந்தாலும் சிங்கப்பூருக்கு வந்த புதிசில் நான் காய்ச்சலாகிக் கிடக்க எனக்கு கொர்லிக்சும் தோடம்பழமும் கரைச்சுத் தந்தவர்கள் இவர்கள்தான் என்ற நன்றி எனக்கு இருக்கு.
எனது அறை நண்பர்களில் ஒருவரான பாஸ்கரன் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தார்.ஆனால் அவர் நித்திரையாகவில்லை என்பதும் ஞானசேகரம் கதைக்கிறதை அவர் கேட்டுக் கொண்டு கண்ணை மூடிப் படுத்திருக்கிறார் என்பது தெளிவாகவே தெரிஞ்சது.இன்னொரு அறை நண்பனான கனகேஸ்வரன் அடுத்த பக்கத்து அறையிலிருந்து கதைச்சுக் கொண்டிருந்தான்.
„அது பிரச்சினையில்லை’ என்று ஞானசேகரத்துச் சொல்லிவிட்டு நான் குளிக்கப் போய்விட்டன்.குளிச்சுப் போட்டு வந்து ஒரு தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு எனது அறைக்குள் போன போது, எனது கட்டிலின் மேல்தட்டில் படுத்திருந்த ஞானசேகரம், பொஸ் பாரதிராஜாவின்ரை படம் என்றால் நல்ல படமாகத்தானே இருக்கும், கதை நல்ல கதையோ என்றான்.கதையைச் சுருக்கமாகச் சொல்லிக்
கொண்டிருந்தன், அப்பொழுது அறைக்குள் வந்த கனகேஸ்வரன் தனது கட்டிலில் உட்கார்ந்து அவனும் நான் சொல்வதை கேட்டான்.
அப்பொழுது நாங்கள் கதைச்சது பாஸ்கரனுக்குப் பிடிக்கவில்லையோ தெரியாது,சினந்து கொண்டே திரும்பி சுவர் பக்கம் பார்த்தபடி படுத்தார்.
கதையைச் சொல்லி முடிச்சதும், கனகேஸ்வரன் „மச்சாளின்ரை மகள் என்று சொல்றியள் சொந்த மச்சாளின்ரை பிள்ளையோ, கல்யாணம் செய்திட்டாவோ „ என்று கேட்டான்.
„ என்ரை அப்புவின்ரை தமக்கையின்ரை இரண்டாவது மகள் அப்புக்கு மருமகள், அவரின் மகள் உறவு முறையில் எனக்குப் பெறாமகள், கல்யாணம் செய்திட்டாள், புருசன் ஊரிலைதான்’ என்றன்.அதற்குப் பிறகு யாருமே எதுவும் பேசவில்லை.அவரவர்பாட்டில் நித்திரை கொள்ளத் தொடங்கினம்.
அடுத்த நாள் நேரத்தோடு நித்திரையாலை எழும்பி குளிச்சு தேத்தண்ணியை வேகமாகக் குடிச்சிட்டு யோமலருக்கு ரெஒலிபோன் செய்து கதைப்பதற்காக வீட்டைவிட்டு இறங்கி பொது ரெலிபோன் பூத்துக்கு பில்டிங்கை விட்டு இறங்கிப் போய்க் கொண்டிருந்தன்.
அப்பொழுது’அண்ணை’ என்று ஒரு பெண்குரல் கேட்க, திரும்பிப் பார்த்தன் முன் பில்டிங் பொம்பிளைப் பிள்ளைகளில் ஒருத்தியான மல்லிகா எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.
அந்தப் பிள்ளை வரும்வரை தாமதித்த நான், கிட்ட வந்ததும் „நேரத்தோடை இந்த நேரம் எங்கை போறியள் „ என்று கேட்க ஊருக்கு ரெலிபோன் பண்ணத்தான்,நீங்கள் எங்கை போறியள், அது சரி அண்ணை நீங்கள் ஏன் இப்ப எங்கடை
ரூமுக்கு வாறதில்லை, பொடியங்கள் ஏதேனும் சொன்னவையோ „ என்று கேட்க, „சீச்சி அவங்கள் ஒன்றும் கதைக்கிறதில்லை, என்று நான் சொல்ல „அண்ணை உங்களிலை எங்களுக்கு நல்ல மதிப்பு இருக்கு,இதைக் கேட்கலாமோ இல்லையோ தெரியாது கோபிக்காதையுங்கோ உங்களுக்கும் யாரோ மலேசியன் பிள்ளைக்குமிடையில் ஏதோ தொடர்பிருக்கென்று ரூமில கதைச்சவை, அதற்கு நான் சொன்னன், அண்ணை அப்படிப்பட்டவரில்லை, அவருக்கு ஊரிலை பெண்சாதி பிள்ளைகளிருக்கினம் அதோடை அவர் ஊரிலையிருந்து வாற போட்டோக்களைக்கூட ஆசையாகக் காட்டிறவர் என்று உண்மையேண்ணை’ என்று மல்லிகா கேட்க „அப்படி ஒன்றுமேயில்லை உங்களோடை கதைக்கிற மாதிரி அந்தப் பிள்ளையோடையும் கதைக்கிறன் அவ்வளவுதான் „ என்றன்.
மல்லிகா நான் சொல்லியதை நம்பினார்’அண்ணை நீங்களும் ரெலிபோன் கதைக்கவா வந்தனீங்கள்’ என்று கேட்க,’கதைக்கத்தான் வந்தனான் முதலிலை நீங்கள் கதையுங்கள் பிறகு நான் கதைக்கிறன் என்று அந்தப் பிளளையைக் கதைக்கச் சொல்லிவிட்டு ரெலிபோன் பூத்திலிருந்து கொஞ்சம் தள்ளி நின்றன்.
மல்லிகா கதைச்சிட்டு ரெலிபோன் பூத்தைவிட்டு வெளியே வந்து „அண்iணை வாறன்,நான் அப்போதை கதைச்சதையிட்டுக் கோபிக்காதையுங்கோ,எங்கடை வீட்டிலை பிள்ளையள் கதைச்சினம்….அதுதான் „ என்று இழுத்தவள், „ நேரம் இருந்தால் பின்னேரம் வீட்டுப் பக்கம் வாங்கோவன்’ என்றாள்.
„பார்ப்பம் நேரமிருந்தால் வருகிறன் என்று „ சொல்லிக் கொண்டே ரெலிபோன் பூத்துக்குள் நுழைஞ்சன்.
ரெலிபோனை டயல் செய்து ஒரு றிங்க போனவுடனேயே „கலோ புருசனாரோ சொல்லுங்க,நான் உங்க பெண்டாட்டிதான்,நாங்க போனாப்புறம் , உங்க கசினோட
மகள் என்னப்பற்றி என்ன சொன்னாங்க மூடிமறைக்காம சொல்லுங்க புருசனாரே’ என்றவள் கொண்டு போன றொட்டியைச் சாப்பிட்டீங்களா, நல்லாத் தூங்கினீங்களா’ என்று கேட்டவளுக்கு எங்கிருந்து சொல்வது என்று தெரியாமல்,’ நான் ரெலிபோன் எடுத்தவுடனேயே சொல்லுங்க புருசனாரோ என்றவள், நான்தான் ரெலிபோன் எடுத்தது என்று எப்படி உங்களுக்குத் தெரியுமேன்று „கேட்க உண்மையான காதலுக்கு அந்தச் சக்தி இருக்கும் புருசனாரே, நீங்க என்னோட புருசன் என்று மனசிலும் மூளையிலும் பதிச்சிட்டுதுங்க,அது என்னைக்குமே மாறாது’ என்று உருகி தழதழத்துச் சொன்னவளின் குரல் அவளின் அழுகையைக் காட்டிக் குடுத்தது.
„அழுகிறீர்களா’என்று கேட்க, „ஆமாங்க அழாம என்ன செய்ய முடியுமங்;க ஊரில அக்கா பிள்ளைங்க இருக்கத்தக்கதாக என்னயும் பெண்டாட்டியா ஏற்றுக் கொண்டீங்களே அதை நினைச்ச ஆனந்தக் கண்ணீருங்க இது’ என்றாள்.
„சரி இதுக்குப் போய் யாராவது அழுவாங்களா’ என்று அவளை அமைதிப்படுத்தினன்.
சில விநாடிகள் அமைதியானவள் „ அவங்க என்ன சொன்னாங்க’ என்று கேட்க,’உங்கடை தோளில படுத்து நித்திரை கொண்டதை கேலி செய்தவ, போகிற போக்கைப் பார்த்தால் உங்கடை கழுத்திலை தாலி கட்டிடுவன்’ என்று சொன்னதைச் சொன்னதும்’ ஆமா பெண்டாட்டியின்ரை தோளிலை புருசன் சாய்ஞசா அவங்களுக்கு என்னவாம் „ என்றவள், தாலி கட்டப் போறதைச் சொன்னீங்களா’ என்று கேட்டாள், நான் „இல்லை சொல்லேலை’ என்று சொன்னன்.அதற்கு அவள் எனக்கும் சங்கடமாத்தான் இருக்குங்க, ஆனா நீங்க எனக்கு வேணும்ங்க’ என்றாள்.
மச்சாளின் மகளின் வீட்டில் வைச்சு றொட்டியையும் சிங்களப் பிள்ளைகள் கொண்டு வந்த பாணையும் பகிர்ந்து சாப்பிட்டதைச் சொன்னன்.
„ஆமா ஈவினிங் என்ன பிளானுங்க’ என்றாள்.ரெலிபோன் பண்ண வந்த போது முன் பில்டிங்கில் உள்ள பொம்பிளைப் பிள்ளைகளில் ஒருத்தியான மல்லிகாவைச் சந்திச்சதையும், அவையின்ரை வீட்டுக்கு வரச் சொன்னதையும் சொன்னன்.
அதற்கு அவள் உங்கள எல்லாருக்கும் பிடிக்குமுங்க, மலேசியா ஜோகூர்பாருவிலிருக்கிற எனக்கு சிறீலங்காவிலிருந்து வந்த உங்களைப் பிடிச்சு நான் இப்ப பெண்டாட்டியாயிட்டேனே.நாங்க சாய்ச்சிக்கு போனப்புறம் அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போவீங்கதானே.இன்னும் நான்கு நாட்கள்ள நாங்க ஒரே வீட்ல இருக்கப் போறோமுங்க என்று மகிழ்ச்சியாகச் சொன்னாள்.
யோகமலருடன் கதைச்சு முடிச்ச நான் பக்கத்திலிருந்த பேக்கறியில் பனிஸ் பாண் என வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தன்.
(தொடரும்)
![]()