இலங்கை
உடுப்பிட்டி சிங்கம் சிவாவின் 24 ஆம் ஆண்டுநினைவு தினம்

உடுப்பிட்டி சிங்கம் என வர்ணிக்கப்படும் முன்னாள் பிரதி சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் முருகேசு சிவசிதம்பரத்தின் 24 ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை (05) காலை அனுஷ்டிக்கப்பட்டது.
கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இளையதம்பி இராகவன் தலைமையில் நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையில் மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றி இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன்,கரவெட்டி பிரதேச சபை தலைவர் சுரேந்திரன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினர், கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
![]()