கவிதைகள்
ஹைக்கூ கவிதைகள்… கவிதாயினி ஆரையூர் தாமரை, ஜெர்மனி

இந்தச் சாக்கடையில்
எந்தத் தவளை புனிதமாகிறது
சமகால அரசியல்!
இலவசம் என்பதாலோ
இதுவும் அள்ளியள்ளி வீசப்படுகின்றன
தேர்தல் வாக்குறுதிகள்!
வாக்களிக்கும் உரிமை
இல்லார்க்கெல்லாம் வழங்கப்படுகிறது
தானமாக இலஞ்சம்!
மாப்பிள்ளை வேடம்
கச்சிதமாய்ப் பொருந்துகிறது எல்லார்க்கும்
தேர்தல் பிரச்சாரத்தில்!
யானை முட்டைகளை
அடைகாக்கின்றதாம் எறும்புகள்
எறும்புகளின் அரசியல்!
தேர்தல் காலத்தில்
தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்
மாங்காய்த் தீவு(ஈழம்)!
நாளை நான் என்பதையுணர்வதில்லை
சில பழுத்த இலைகள்!
முத்தமிட்டுச் சென்ற முகிலின் தடங்கள்!
பழுத்த இலைமேல் மழைத்துளி!
காற்றின் துரோகமா
காலத்தின் துரோகமா
மடியேந்துகிறது பாறை!

![]()