கதைகள்

நடுகைக்காரி!…..தொடர் 10 ….. ( குறுநாவல் ) …. ஏலையா க.முருகதாசன்.

தொடர் 10

நடுகைக்காரிகள் அம்பனை வயல்வெளித் தோட்டங்களில் வேலைசெய்ய எப்பொழுதுமே ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள்தான் வருவார்கள்.

ஞானம் பார்வதியைச் சந்திச்சு காதலிக்கத் தொடங்கிய இரண்டு நாட்களுக்குள்ளேயே ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வாரு சம்பவங்களாக நடந்து கொண்டிருக்கின்றன.

பார்வதி ஒவ்வொரு நாளும் வயலுக்கு வர வேணும் அவளை ஒவ்வொரு நாளும் சந்திச்சு அவளுடன் கதைக்க வேண்டும்,அவளை சைக்கிளில் ஏற்றி வீடு வரை கொண்டு போய்விட வேண்டும் என்று ஆசைப்பட்டான் ஞானம்.

பார்வதியைச் சந்திக்கும் முன்பே அம்பனை ரியூட்டோரியலில் பத்மசேகரத்திடம் சிங்களம் படிக்கத் தொடங்கியதையும், அந்தப் படிப்பு போதாதென்று தெல்லிப்பழைச் சந்திக்கு கிட்ட உள்ள ஆனந்தா பேக்கறி முதலாளியின் மகளிடம் சில நாட்களாக சிங்களம் படிக்கத் தொடங்கிவிட்டான்.

ஆனால் தான் சிங்களம் படிக்கத் தொடங்கியதையும், ஆனந்த பேக்கறி முதலாளியின் மகளிடம் சிங்களம் படிப்பதையும் என்ன காரணத்திற்காவோ ஞானம் பார்வதிக்குச் சொல்லாமலிருந்தான்.

ஞானத்தின் தாயும் தகப்பனும் சனிக்கிழமை காரைநகரில் நடக்கப் போகும் கல்யாண வீட்டுக்கு அவர்களிருவருமே போவதாகச் சொல்லிவிட்டதால்,முதல் நாள் வெள்ளிக்கிழமை பார்வதியைச் சந்திச்சு அவளுடன் இன்னும் இரண்டு பேரை புல்லுப்பிடுங்கக் கூப்பிட்டிட்டு,பார்வதியுடன் நேரத்தைக் கழிக்க வேண்டும் மற்றைய இரண்டு பேரையும் புல்லுப்பிடுங்கச் சொல்ல வேண்டியதுதான் என வியூகம்

அமைச்சவன் தாயிடம்’ அம்மா அம்பனைச் சந்திவரையும் போயிட்டு வாறன் என்று சொல்லிக் கொண்டே மேசையில் கிடந்த சஞ்சிகையொன்றை எடுத்து, சைக்கிள் காண்டிலில் செருகியவன் தாயின் பதிலுக்கு எதிர்பாராமல் சைக்கிளில் உட்கார்ந்து விழக்கத் தொடங்கினான்.

ஞானம் வீட்டுப் படலையைத் திறந்து ஒழுங்கைக்குள் அவன் வந்ததும் பின்னாலிருந்து „ஞானம் நில் „ என்று குரல் கேட்க, திரும்பிப் பார்த்தான் அவனுடைய நண்பர்களில் ஒருவனான சண்முகராஜா சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.

சைக்கிளை நிறுத்தி காலை நிலத்தில் ஊன்றியபடி நண்பன் வரும்வரையும் காத்திருந்தவன், அவன் அருகில் வந்ததும் „ நான் அம்பனைச் சந்திவரையும் போகிறன் வாறியளா’ எனக் கேட்க, எந்தப் பதிலுமே சொல்லாமல் அவனும் ஞானத்துடன் போனான்.

சீனியம்மானின் கடையடியில் இருவரும் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள்ளே போனவர்களில் நீயும் சாப்பிடன் என்று நண்பனைக் கேட்க அவன் வேண்டாம் நான் சாப்பிட்டிட்டு வந்திட்டன் என்று சொல்ல,’நன்னாரிப் பிளேன் ரீ குடிக்கிறியா என்று அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் சீனியம்மானிடம் தனக்குத் தோசைக்கும்,சுண்டலுக்கும் இரண்டு நன்னாரித் தேத்தண்ணிக்கும் சொன்னவன்; ஐஞ்சு வடைகளைச் சுற்றித்தரும்படி கேட்கிறான்.

ஞானம் வடைப் பார்சலுக்குச் சொன்னதும்’யாருக்கு’ என்பது போல நண்பன் ஞானத்தைப் பார்த்தாலும் அதை அவன் கேட்கவில்லை.வேகம் வேகமாகச் சாப்பிட்டு ரீயையும் குடிச்ச ஞானம் நண்பனுக்கும் சேர்த்து சாப்பிட்டவைக்கு காசைக் குடுத்துவிட்டு சரி நான் வாறன் என்று ஞானம் சொல்ல, „பொறு நாளைக்கு ஏழாலை கிரிக்கட் ரீமுடன் ஏழாலையில் மாட்ச் இருக்கு வாறியா „ என்று நண்பன் கேட்க „ இல்லை நான் வரேலை, எனக்கு நேரமில்லை’என்று சொல்லியபடியே

கiடையை விட்:டு இறங்கியவன் தெல்லிப்பழைச் சந்தியை நோக்கிப் போகிறான்.

பார்வதியுடன் இன்னும் மூன்று நடுகைக்காரிகள் சந்தையடிப் பாலத்தாலை வந்து அம்பனையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களில் தனலக்சுமி என்ற தனம்’ பாறு என்ன விளாம்பழம் எல்லாம் தீத்திறாயாமே,…ம் …நடக்கட்டும், ஒரே ஆக்களிலேயே விரும்பியவனையும் விரும்பியவளையம் கல்யாணம் செய்வது படு கஸ்டம்.அனால் நீ விளாங்காய் தீத்தின ஆளுக்கும் உனக்கும் மலைக்கும் மடுவிக்குமுள்ள வித்தியாசம்; இருக்கு,அந்தத் தம்பி நல்ல பிள்ளைதான்,ஆனால் எல்லா நேரத்திலையும் ஒரே குணத்திலை ஆருமே இருக்க மாட்டினம்.

„உன்ரை வாழ்க்கையிலை என்ன நடக்கப் போகுதோ தெரியாது.யோசிச்சு நடந்து கொள்’ என்று சொல்ல „எனக்கு நம்பிக்கையிருக்கு ஞானம் என்னைக் கைவிட மாட்டார் „என்று பார்வதி சொல்ல………..,

„ஏற்கனவே இரண்டு பேர் இப்படித்தான் கல்யாணம் செய்தவை.அவையாலை எங்களோடை ஒட்டவும் முடியலை, அவையோடும் ஒட்ட முடியலை.அவை யாரென்டு உனக்கும் தெரியும்.உன்னால தெல்லிப்பழையில பெரிய குழப்பமே வரப்போகுதோ தெரியாது’ என்று நடுகைக்காரிகளில் இன்னொருத்தி சொல்ல, பார்வதி அதற்கு பதில் சொல்லாமல் நடந்து கொண்டிருந்வள அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப எண்ணியவள், நான் எஸ்.எஸ்.சி சோதனையை பிரைவேட்டாக எடுக்கப் போகிறன்,அவர்தான் எனக்கு ரியூசன் தரப் போகிறார்.வீட்டுக்க வந்த சொல்லித் தாறன் என்று சொன்னார்.

„ஓ அப்படியோ அப்ப நீயும் ஒரு முடிவோடை இருக்கிறாய்.பாஸ் பண்றதுக்காக சோதனை எடுக்கிறியோ

இல்லாட்டி படிப்பிக்கிற சாட்டில் அவரைச் சந்திக்கிறதுக்காக சோதனை எடுக்கிறியோ’ மீண்டும் தனம் கேட்க,’அவர்தான் என்னைக் கட்டாயப்படுத்தி சோதனை எடுக்கச் சொன்னவர், அவர் நல்லவர் எனக்குத் துரோகம் செய்யமாட்டார்.அவரே சொன்னவர் எங்களுடைய காதல் வெகு சுலபத்தில் நிறைவேறாது என்று,எனக்கு நம்பிக்கையிருக்கு அது சரி நான் விளாம்பழத்தை அவருக்கு தீத்தினதை உங்களுக்கு யார் சொன்னது என்று பார்வதி கேட்க,’ நீங்கள் இரண்டு பேரும் இலுப்பை மரத்தடியிலை நின்று விளாம்பழம் சாப்பிட்டதை மதிலுக்குப் பின்னாலையும் வேலிக்குப் பின்னாடியும் கண்கள் பார்த்திருக்கும்; என்பதை மறக்காதை’ என்று தனம் சொல்கிறாள்.

ஆனால், பார்வதி பார்த்தால் பார்க்கட்டும் யார் பார்த்தால் என்பது போல தனம் சொன்னதைக் காதிலை விழுத்தவே இல்லை.

„உன்ரை அம்மா கிணத்தடியிலை வைச்சு பாருவோட எங்கடை வீடுவரையும் கதைச்சக் கொண்டு வந்த பொடியன் யார் என்று என்னைக் கேட்டவ என்று தனம் சொன்னதும்’ நீங்கள் என்னக்கா சொன்னனீங்கள்’ என்று படபடப்புடன் பார்வதி கேட்க, தெரியேலையென்று பொய் சொல்லிட்டன்,நீங்கள் பாடம் சொல்லிக் குடுக்கப் போகிறவர் என்றதை எப்படியும் சொல்லிவிடு „ என்ற தனம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஞானம் தூரத்தில் வருவதை பார்வதி கண்டுவிடுகிறாள்.

அவர் வந்துகொண்டிருக்கிறார் என்று பார்வதி சொல்ல, இன்னொருத்தி காலம் கலிகாலமாக மாறிவிட்டது, இவ்வளவு நேரமும் ஞானம் என்று சொல்லிக் கொண்டிருந்தவள் இப்ப அவர் என்கிறாள்.

கல்யாணம் முடிச்சவள்தான் புருசனை அவர் என்று கதைப்பாள் என்று கேலி செய்ய, அவரும் நானும் உடலாலை புருசன் பெண்டாட்டியாகவில்லையே தவிர மனசார புருசன்

பெண்டாட்டியாகிவிட்டோம் „ என்று பார்வதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே நடுகைக்காரிகளுக்கு அருகில் வந்துவிட்டான் ஞானம்.

நடுகைக்காரிகளைப் பார்த்து ஞானம் இன்றைக்கு எங்கை வேலை என்று கேட்க இன்றைக்கும் மார்க்கண்டுவின்ரை தோட்டத்திலைதான்

என்ற தனம் சொல்ல’அவரிட்டையா „ என்று சலிப்படைந்த ஞானம் இன்றைக்கும் பார்வதியைப் பார்க்க அவரின்ரை தோட்டத்துக்குப் போனால் இவன் என்ன நேற்றும் வந்தவன் இன்றைக்கும் வருகிறானே என்று கடுமையாக யோசித்து ஏதாவது கதையைக் கட்டிவிடுவார் என்று யோசித்தவன்,பார்வதியைப் பார்க்க ஏதாவது திட்டம் போடலாம்,இப்ப இவையிட்டை ஒருவிசயத்தைச் சொல்ல வேணுமே என்ற எண்ணத்துடன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டே „ நாளைக்கு எங்கடை தோட்டத்திலை வேலை இருக்கு,பாறுவும் இன்னும் இரண்டு பேர் வந்தால் போதும்’ என்று ஞானம் சொல்ல’ எங்களுக்கு எல்லாம் தெரியும் தம்பி பாறு எப்பவும் உங்கடை தோட்டத்துக்கு வருவாள் என்று ,தோட்ட வேலை இருக்குதோ இல்லையோ அவள் வராட்டால் உங்களுக்கு பொழுதே போகாதே , சரி பாறுவையும் கூட்டிக் கொண்டு எங்களிலை யாராவது மூன்று பேர் வருகிறம்’ என்று சொன்ன தனம் „ இறுக்கி நடவுங்கோ இப்படித் தேர் அசையிற மாதிரி அசையாதையுங்கோ என்று சொன்னவள், எங்களுக்கு விளங்குது „ இதுகள் என்னையும் அவரையும் தனியாய்க் கதைச்சுக் கொண்டு வரவிடாமல் தாரா மாதிரி நடக்குதல் என்று உன்ரை முகமே சொல்லுதே’ என்று பார்வதியை பார்த்து துடுக்காகச்; சொன்ன தனம் மற்றவர்களை வேகமாக நடக்கச் சொல்லித் தானும் நடந்தாள்.

பார்வதியுடன் உரசியும் உரசாமல் நடந்து கொண்டிருந்தவன் கையிலை இருந்த வடைப் பார்சலைக் கொடுத்து சாப்பிடச் சொல்லிவிட்டு „உங்கடை தோழிகள் இங்கிதம் தெரிஞ்சவையாக இருக்கினமே’ என்றவன்,’உங்களிட்டை ஒரு விசயம் சொல்ல வேணும்,நான் சிங்களம் படிக்கிறதை உங்களுக்குச் சொல்லவேயில்லை மறந்திட்டன்.

சனிக்கிழமைகளில் அம்பனைச் சந்தியிலை இருக்கிற ரியூட்டோரியில் பத்மசேகரம் என்பவரிட்டை படிக்கிறனான்,அதோடை ஆனந்தா பேக்கறி முதலாளியின்ரை மகளிட்டையும் படிக்கிறன் இன்றைக்கும் படிப்பு இருக்கு பினனேரம் உங்களோடை வந்து, உங்களை வீட்டடியில் விட்டிட்டு, அப்படியே படிக்கப் போறன் „ என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே’ சிங்களப் பிள்ளையிட்டையா,அந்தப் பிள்ளை கல்யாணம் செய்த பிள்ளையா’ என்று வேகமாக பார்வதி கேட்க,’நான் நினைக்கிறன் அந்தப் பிள்ளை கல்யாணம் செய்யாத குமர்ப்பிள்ளைதான் என்றவள்,’நீங்கள் படிக்கப் போகேக்கிலை நானும் வாறன், அந்தப் பிள்ளை சிங்களம் படிப்பிக்கிறதை நானும் பார்க்க வேணும்,சிலநேரம் நானும் சிங்களம் படிக்கலாந்தானே….என்று அவனைப் பார்த்து கள்ளச் சிரிப்பு சிரிக்க, „எனக்கு எல்லாம் விளங்குது இப்பவே இப்படியென்றால் கடவுளே இனி என்னென்ன ஓடரெல்லாம் வரப் போகுதோ தெரியாது’ என்று அவனும் சிரிக்கிறான்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *