கவிதைகள்
மருவும் மருதம்!… அலறி.

பீடிப்புகை மணத்தை 
அருந்தியபடி
அசைந்து நகர்கிறது பொணயல்
கேட்டிக் கம்பு இழுவையில்
தோலுரிகின்றன
சாம்பலும்,செவலையும்
ஓட்டிச் செல்கிறான் ஒய்யாரமாக
ஏற்றிச் செல்லும்
வைக்கோல் கற்றைகளில் நிரம்பியிருந்தன
வயல்
வயிறு
வாழ்வு
இந்தப் போகம் முடிந்தது
அமோக விளைச்சல் என்றில்லை
பத்து பன்னிரெண்டு அவணம்
கதிர் பறிந்த பருவம் முதல்
ஒட்டு வட்டை விட்டது வரை
சன்னதமாய் பறக்கும்
சட்டித்தலைக் குருவி
கொக்கு
பதர்கள்
வண்டிக் கீழசையும் லாந்தர் ஒளிபோல
பிரகாசமாய்
மங்கலாய்
பொட்டாய்
மருதமும்,வசந்தமும் தூர்ந்து போகின்றன
எச்சமும்,சொச்சமுமாய்
வண்டில் பாரம் மாட்டைத் தொட
மாட்டையும்,வண்டிலையும்
இழுத்துச் செல்கிறது
மணியோசை
![]()