இலங்கை

பாடகரை விடுதலை செய்யக் கோரி வல்வையில் கவனயீர்ப்பு போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் மெல்லிசைப் பாடகர் சங்கீத்தனை விடுதலை செய்யவும் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை முற்பகல் இப் போராட்டம் இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல் வாதிகள் தரப்பில் வலி. கிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோஸ், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன் உள்ளிட்டோரும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மறும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button