நிகழ்வுகள்

மெல்பேர்ணில் பிரிகேடியர் தீபன் நூல் வெளியீட்டு விழா

தமிழீழ விடுதலைக்காக “பிரிகேடியர் தீபன்” அவர்களின் வாழ்வும் போராட்டப் பயணமும், அவரது தனித்துவமான தலைமைத்துவமும், போர்க்கள அனுபவங்களும், அவருடன் பணியாற்றியோரின் நினைவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ள “பிரிகேடியர் தீபன் – களமுனைகளின் செருக்கள நாயகன்” எனும் நூலின் அறிமுக விழா எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் நாள் (சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு, மெல்பேர்ண் St. Christopher’s Catholic Parish, Syndal, Glen Waverley மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நூல், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்களிப்பை வழங்கிய பிரிகேடியர் தீபன் அவர்களின் ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் போரியல் அனுபவங்களை வரலாற்றுப் பதிவாக ஆவணப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நூல் அறிமுகம், சிறப்புரைகள், நினைவுப் பகிர்வுகள் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தமிழர் வரலாறு, தேசிய விடுதலைப் போராட்டம் மற்றும் ஆவணப்படுத்தல் தொடர்பில் அக்கறை கொண்ட அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

நிகழ்வு விபரங்கள்

நிகழ்வு: பிரிகேடியர் தீபன் – களமுனைகளின் செருக்கள நாயகன் நூல் அறிமுக விழா

நாள்: 29 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 4.00 மணி

இடம்:
St. Christopher’s Catholic Parish,
5 Doon Avenue,
Syndal, Glen Waverley,
Victoria 3150

தொடர்புகளுக்கு:

* அன்புச்செல்வன் (பிரசாத்): 0401 111 120
* வசந்தன்: 0433 002 619

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button