உலகம்

சுவீடனில் நாடாளுமன்ற தேர்தல் – அரியாசனத்திற்காக மோதும் இரு தலைவர்கள்

சுவீடனில்  நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மக்டலேனா ஆண்டர்சன் ஆகியோர் பிரதமர் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர்.

கடும் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சி வெற்றிவாகை சூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பழமைவாதக் கொள்கை கொண்ட பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மீண்டும் ஒரு பதவிக்காலத்தைப் பெற முயல்கிறார். ஆனால், அவர் ஆட்சியில் நீடிப்பது ‘ஸ்வீடன் டெமாக்ராட்ஸ்’ (Sweden Democrats) கட்சியின் ஆதரவைப் பொறுத்தே அமையும்.

கிறிஸ்டர்சனின் முக்கிய போட்டியாளர் அவருக்கு முந்தைய பிரதமரும், சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மக்டலேனா ஆண்டர்சன் ஆவார்.

நாட்டின் இரு முக்கிய அரசியல் அணிகளுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *