இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் 3483 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகைக்கு முன்பாகவே இவர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது காணாமல்போன தமது உறவுகளின் படங்களையும் அமெரிக்க ஐரோப்பிய கொடிகளையும் கையில் ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![]()