உலகம்

ரஷ்யா மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல் – குறைந்தது 08 பேர் உயிரழப்பு

ரஷ்யாவில் கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 08 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸுக்குச் சொந்தமான கிடங்கு உள்ளிட்ட இலக்குகளை மையமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று இரவு மாத்திரம் 635 உக்ரேனிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக விளையாட்டு மைதானத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 13 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இரு குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா லவோவா (Maria Lvova-Belova), இந்தத் தாக்குதல் உக்ரைனின் “மற்றொரு மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்” என்று கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button