பலதும் பத்தும்

AI மூலம் 100 கோடி உயிரிழப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள் சாத்தியம் ; பில் கேட்ஸ் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தவறான நபர்களின் கைகளில் சென்றால், மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை உருவாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக மாறியுள்ளதாக Microsoft இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 100 கோடி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிலான பேரழிவு நிகழ்வுகள் சாத்தியமாகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

AI மூலம் 100 கோடி உயிரிழப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள் சாத்தியம் ; பில் கேட்ஸ் எச்சரிக்கை | Ai Driven Could Cause Billion Deaths Bill Gates

குறிப்பாக, தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் அதிநவீன AI கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் தாம் கவலை கொண்டுள்ளதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சைபர் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் உருவாகக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

AI நிறுவனங்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொள்வது மாத்திரம் போதுமானதாக இருக்காது எனத் தெரிவித்துள்ள பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை பாதுகாப்பான முறையில் நிர்வகிப்பதற்காக அரசாங்கங்களால் சட்டங்கள், கண்காணிப்பு கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *