கதைகள்

ஆகாயப்பந்தல் 16 …. ஏலையா க.முருகுதாசன்

க.முருகுதாசன்

தகப்பன்மாரைவிட தாய்மார் பெண்பிள்ளைகளின் நடவடிக்கைகளை வைச்சே அவர்கள் மனதில் என்ன இருக்கின்றது என்பதைக் கண்டுபிடிச்;சுவிடுவார்கள்.
மதுசாவும் சரவணனும் போகும் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரே வகுப்பில் படிச்சாலும் அவர்கள் இருவருமே அடிக்கடி கதைப்பதில்லை. கலோ என்பதுடன் நிற்பாட்டிக் கொள்வார்கள் .சில பாடங்களுக்கு மட்டுமே ஒரே வகுப்பில் இருப்பார்கள்.

ஆனால் அவர்களிருவரும் சந்திக்கும் போது சொல்லப்படும் அந்தக் கலோ என்ற வார்த்தைக்குள் ஏதா ஒரு ஈர்ப்பு அவர்கள் இருவருக்குள்ளம் ஆழமாக பதிந்தவிடுவதால் மதுசாவைப் பார்த்து வீட்டை வாறியளா என்று என்று சரவணன் கேட்டதும் சரவணன் வீட்டக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் ஓம் எனக்கும் வர விருப்பந்தான் என்று மதுசா சொன்னதனால்தான் மதுசாவை சரவணன் கூட்டிக் கொண்டு தனது வீட்டுக்கு வந்திருந்தான்.

என்னோடை படிக்கிற சரவணன் என்ற எனது வகுப்புத் தோழன் தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லிக் கேட்கிறார் போகவா அம்மா என்று தாயிடம் மதுசா கேட்ட போது போகத் தேவையில்லை என்று சொல்வதற்கான முடிவில் தொண்டைவரை வார்த்தைகளை நோக்கி வந்த அந்த முடிவை நிறுத்தி உன்னோடு படிக்கிறவர் தானே போயிட்டுக் கெதியிலை வா என்று தாய் சொன்ன போதும் மதுசாவின் தாயான சகுந்தலா ஒரு வேளை அவர்களிருவருக்குமிடையில் ஏதாவது இருக்குமோ என்று நினைக்கவும் செய்தாள்.

வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்குமளவுக்கு அவள் வெகுளியுமல்ல வெள்ளந்தியுமல்ல.சகுந்தலா உளவியலை முக்கிய பாடமாக அதிவிருப்பமான பாடமாக எடுத்து பட்டப்படிப்பு படித்து அதில் முதலாவது தகுதிகாண் நிலையில் சித்தியடைந்தவள்.

மனிதர்களின் அனைத்துச் செயல்பாடுகளுமே வேதியல் இணைவில் தோன்றுபவையல்ல உளவியல் சார்ந்தவையுமாகும். .என்பதை தனது உறவினர்கள் நண்பர்களுடன் கதைக்கும் போதெல்லாம் சொல்லி ஒவ்வவொரு செய்கைக்குப் பின்னாலும் காரண காரியங்கள் உண்டு பயன்படுத்தலும் உண்டு என்பதை தெளிவாகவே அவர்களுக்குப் புரியம்படி சுலபமாக விளக்கி வருபவள்.
அத்தகைய தாயார் தனது மகளின் ஒவ்வொரு செய்கையையும் தெளிவாகவே உணர்ந்து வைச்சிருந்தாள்.

மதுசா சரவணன் வீட்டுக்குப் போன போது மஞ்சள் நிற சீலையை உடுத்திக் கொண்டும் மஞ்சள்நிற ரோசாப்பூக்களையும் கொண்டு போனதை சகுந்தலா அதன் அர்த்தத்தை உணர்ந்திருந்தாலும் ஏன் நீர்வணண்ண மஞ்சள் பூப்போட்ட மஞ்சள் சீலையை உடுத்திக் கொண்டு போகிறாய் என்றோ ஏன் மஞ்சள் பூக்களைக் கொண்டு போறாய் என்று கேட்கவில்லை.

மஞ்சள் ரோசாப் பூக்களை அவள் பூக்கடையில்: வாங்காது தமது வீட்டுக்குப் பின்புறமுள்ள வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த ரேசாப்பூக்களைக் கவனமாக காம்புடன் வெட்டி எடுத்துக் கொண்டு போயிருந்தாள்.

சரவணன் தன்னை இத்தனை மணிக்கு வந்து கூப்பிடுவான் எளன்று சொல்லி வைத்தமைக்கமைய நேரத்தோடு எழுந்து குளித்து பிறகு ரோசாப்பூக்களை வெட்டி எடுத்து அதனை மஞ்சள் றிபனினால் கட்டி கூடத்து மேசையில் வைச்சலிருந்து மகளின் உற்சாகமான செய்கைகளை சகுந்தலா கவனிக்கத் தவறவில்லை.
ஒரு பக்கம் தன மகளோடு படிக்கிற சக மாணவன் தனது வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போக வருகிறான் அவ்வளவுதான் என தாயின் மனம் நினைச்சாலும் இது காதலுக்கான வயசுதான் என்பதையம் அவள் மனம் நினைச்சுக் கொண்டது.
சரவணன் மதுசாவைக் தனது வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனதற்குப் பிறகு சகுந்தலா பலவிதமாக யோசித்துக் கொண்டிருந்தாலும்.ஒரு உளவியல் பட்டதாரியின் பார்வையே எப்பொழுதும் வித்தியாசமாகத்தான் இருக்கம்.
சராசரி மனிதர்கள்,பருவ வயது ஆணும் பெண்ணும் பழகும் போது அவர்களைப் பார்த்து எடை போடுவதற்கும் உளவியல்: படித்தவர்கள் பார்க்கும் பார்வைக்குமிடையில் பாரிய வேறபாடும் இடைவெளியும் இருக்கும்.

பருவ வயதுடைய ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் தோன்றும் வேதியல் ஈர்ப்புத்தான் காதல் என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது என்பது மனவியல் ஆய்வாளர்களின் ஒருமித்த முடிவாக இருந்த போதும்,ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் அந்த உணர்வினை உடலும் மனமும் சேர்ந்து இயங்குகின்ற அந்த பாலியல் கவர்ச்சியைச் சந்திக்கும் போது தமது பிள்ளைகள் என்ற தனித்துவமான அக்கறை எழாமலிருக்காது.

சகுந்தலாவும் அந்த மனநிலையிலேயே இருந்தாள்,மதுசா தனது வகுப்புத் தோழன் சரவணனுடன் போகும் போது மஞ்சள் சீலையும் உடுத்து மஞ்சள் றோஜாப் பூக்களையும் கொண்ட போனதைக் கவனித்தீர்களா எனத் தனது கணவன் வேலானந்தனிடம் சொல்ல கவனிச்சனான் என்று ஒரே வார்த்தையில் அவரும் பதில் சொல்கிறார்.

மதுசாவைக் தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனதன் பின்பு தனது வீட்டில் அவளுடன் அதிகமாகச் சரவணன் ; பேசவேயில்லை.தானுண்டு தன் வேலையுண்டு என்பது போல ஏதோ செய்து கொண்டிருந்தான்.

ஆனால் மதுசா தங்களுடைய வீட்டுக்கு வந்ததன் பின்பு அவளைக் கூர்ந்து கவனித்த சரவணன் சாரிணியின் பெற்றோர் மனசில்,மதுசாவின் முகத்தின் வசீகரம்,எடுப்பான நிமிர்ந்த தோற்றம் வார்த்தைகளை அடக்கமாக அளந்து பேசும் பண்பு உடல் மொழி எல்லாமே இவள் எங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்தால் நன்றாக இருக்குமே என எண்ணத் தொடங்கினாலும் சரவணன் சாரிணியின் தகப்பனான மகேந்திரராஜாவைவிட அவர்களின் தாயான சசிசகலாவே அதிக கற்பனையில் மிதந்தால்.

தனது மகனோடு ஒன்றாகப் படிக்கம் சக மாணவி என்ற சராசரி நினைப்புக்கப்பால் மதுசா சரவணனுக்கு மனைவியாக தங்கள் வீட்டுக்கு மருமகளாக வருவாள் என்ற பெரும் நம்பிக்கை சசிகலாவை விநாடிக்கு விநாடி சூழத் தொடங்கிவிட்டது.
தங்கள் குடும்பம் பூ10மியைப் போன்று இன்னொரு கிரகத்தில் அங்கும் பூமி மனிதர்களைப் போலவே வாழும் மனிதர்களிலிருந்து பூமிக்கு வந்து பூமி மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதனால் அதனால் மதுசாவின் பெற்றோர் சம்மதிப்பார்களா என்பதையும் கடந்து மதுசாவை தங்களுடைய மகனுக்கு மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்புச் சசிகலாவின்: மனதில் விஸ்வரூபமாக வளர்ந்து கொண்டிருந்தது.

அன்றைய தினம் காலை ஒன்பது மணிக்கு சரவணனுடன் வந்த மதுசா அங்கு தங்கிநின்று இன்னும் பிற்பகல் இரண்டுமணிகூட ஆகவில்லை,அதற்கிடையில் சசிகலா,மகேந்திரராஜா சாரிணி ஆகியோரின் நடவடிக்கைகள் மதுசாமீது அன்பு செலுத்துவதிலும் அவளைத் தம்வயப்படுத்துவதிலுமே இருந்தது.
அவர்களின் வாயில் தம்மையறியாமலே அவர்களின் கிரகத்து மொழியில் பேச முயற்சிக்கையில் தடுமாறிப் பின் சமாளித்தார்கள்.

அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்த மதுசாவின் மனசில் இவர்கள் யாராக இருக்கும் என்ற எண்ணம் அப்பப்ப தோன்றிக் கொண்டேதானிருந்தன.
சாரிணியும் மதுசாவின் மனநிலையை அறிவதற்காக வாய்தடுமாறிச் சொல்வது போல மதுசாவை அண்ணி என்று கூப்பிடுவதும் பிறகு அதைச: சமாளிப்பதற்காக தான் மதுசாவை அண்ணி என்று கூப்பிடாதது போல நடந்து கொண்டாள்.
சசிகலா தன்மீது உறவுக்காரப் பெண் மீது வைச்சிருக்கும் பாசத்திற்கொப்பானதாக இருப்பதையும் சாரிணி தன்னை அண்ணி என்று கூப்பிட்டிட்டு அப்படிக் கூப்பிடாதது போல கவனச் சிதறலுடன் இருப்பதையம் மதுசா கவனிக்கத் தவறவில்லை.

மதுசாவை அண்ணி என்று கூப்பிட்டிட்டு தாயிடம் கண்களால் பேசி மகிழ்வiதையும்,தாய் அதை இரசிப்பதையும் மதுசா கவனிக்கத்தான் செய்தாள்.
ஒரு சொல்லைச் சொன்னதன் பின் அச்சொல்லின் தாக்கம் அதன் எதிராற்றல் ஓரிரு விநாடிகளுக்கு நிலைத்து நிற்கும்.யாரை நோக்கி ஒரு சொல் சொல்லப்படுகின்றதே அச்சொல்லின் பாதக சாதக அர்த்தம் அவர் உள்வாங்கி உணர்ந்து எதிர்வினையாற்றலாக அவரிடமமிருந்து பதில் வரும்.

ஆனால் மதுசாவை நோக்கி அழைக்கப்பட்ட எந்தவொரு சொல்லும் அவளைக் கோபப்பட வைக்கவில்லை.ஏதோ ஒருவிதமான பாசத்துக்குள் தன்னை இலயிக்கச் செய்துவிட்டார்கள் என்று அவளின் அறிவு அவளுக்கு உணர்த்திய போதும் அதனை உடைத்தக் கொள்ள அவள் விரும்பவில்லை.

அந்த வீட்டுச் சூழ்நிலையும் அவர்களின் பேச்சுநயமும் அவர்களின் உடல்மொழியும்; புன்னகைத்த முகம் அவளை அந்தக் குடும்பத்தோடு கட்டிப் போட்டாலும்,மதுசாவின் அறிவின் ஒரு மூலையில் இவர்கள் யார் என்ற கேள்வி எழுந்து கொண்டேயிருந்தது.

அந்தக் குடும்பத்துக்கு தான் தவிர்க்க முடியாதவளாகிவிட்டேன் என அவள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.தன்னை ஒருவேளை சரவணன் பல்களைக் கழகத்திலேயே விரும்பி அதைத் தனது தாய் தகப்பனுக்கு தங்கச்சியாருக்கும் சொல்லி வெளிப்படுத்தத்தான் தன்னை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தானோ எனவும் மதுசாவின் மனசில் அந்த எண்ணம் தோன்றிய போதும்,சரவணன் அதற்கான எந்த அசிகையையும் காட்டாது தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதைக் கவனிச்ச மதுசா சரவணனை நினைச்சு வியப்படைஞ்சாள்.ஒரே விநாடியில் மகேந்திரராஜா,சசிகலா,சரவணன்,சாரிணி,மதுசா என அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும் இடைவெளித் தூரத்திலிருந்த போதும் ஒவ்வொருவரம் ஒவ்வொருவிதமாக நினைச்சுக் கொண்டிருந்தாலும் எல்லாரும் மதுசாவையே நினைச்சுக் கொண்டிருந்தார்கள்.

அதே எண்ணந்தான் மதுசாவின் தாயாரான சகுந்தலாவிடமும் இருந்தது.தனது மகள் எடுப்பான அழகுள் உள்ளவள் என்ற மகிழ்ச்சி சகுந்தாலவுக்கு இருந்தாலும்,அவள் சரணனுடன் போகும் நீர்மஞ்சளில் பூப்போட்ட மஞ்சள,  சீலையில் அவள் இன்னம் எடுப்பாகத் தோன்றினாள்.

தானும் தனது கணவனைக் காதலிச்சே கல்யாணம் செய்தவளாகையால் தனது மகளின் நடவடிக்கையானது தனது மகளும் காதலிக்கத் தொடங்கிவிட்டாளோ என்ற எண்ணத்துடன் இப்பொழுது சரவணன் வீட்டில் அவளின் சூழ்நிலை எவ்வாறு இருக்கும் என யோசித்தாள்.

(தொடரும்…)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *