பலதும் பத்தும்

ஹோர்முஸ் நீர்வழி ‘டிரம்ப்பின் நீர்வழி என கூறிய டிரம்ப்

எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் எட்டுவதற்கு முன்னர், ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்காக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

மியாமியில் சவூதி ஆதரவு முதலீட்டு மன்றம் ஒன்றில் உரையாற்றிய டிரம்ப்,

ஹார்முஸ் ஜலசந்தியை நீர்வழியை டிரம்ப்பின் ஜலசந்தி என்றே குறிப்பிட்டார். அவர்கள் டிரம்ப் ஜலசந்தியைத் திறக்க வேண்டும். அதாவது, ஹோர்முஸை என்று டிரம்ப் கூறினார். மேலும் அவர், மன்னிக்கவும்.நான் மிகவும் வருந்துகிறேன்.

இது ஒரு மிகப் பெரிய தவறு என்றும் கூறினார். ஒரு மாத காலமாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

ஒரு உடன்பாட்டை எட்டுவது சிறப்பாக இருக்கும், ஆனால் ஈரான் ஜலசந்தியை முழுமையாகத் திறந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று அவர் அந்த மன்றத்தில் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *