இலங்கை

யாழ் மாநகர சபையின் 2026 க்கான பட்ஜெட் இரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்; தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு 

யாழ் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை வரவு – செலவுத் திட்டம் யாழ். மாநகர சபையின் சபா மண்டபத்தில் முதல்வர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் பின்னர் வரவு – செலவுத் திட்டம் சபை அங்கீகாரத்துக்கு விடப்பட்டது.

இதன்போது ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வரவு செலவு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 13 உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலா 4 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலா ஓர் உறுப்பினர்களும் என 23 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் 11 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களுமாக 21 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *