இலங்கை

2500 ஏக்கர் காணியை உடன் விடுவியுங்கள்; ஜனாதிபதிக்கு வலி வடக்கு பிரதேச சபை கடிதம் 

வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்திடம் உள்ள பொதுமக்களின் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வலி வடக்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நேற்று பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதேச சபை உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படது.

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினர் வசம் இருக்கும் 2500 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை விடுவிக்க கோரியே குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர், இராணுவம் காடுகளில் இருக்கலாம். பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். பொதுமக்களின் காணிகளில் இருந்து கொண்டு விவசாயம் செய்ய ஆட்களை நியமித்து எந்த வித செலவும் இல்லாமல் மிக குறைந்த விலையில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்கின்றனர். காணி உரிமையாளர்கள் தோட்டம் எதுவும் செய்ய முடியாது காணியும் இல்லாது இருக்கின்றனர். மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *