செம்மணி என்பது எம் மக்களின் வலிகள் சுமந்த அடையாளம்.

தமிழ் மக்களின் உணர்வைப் புரிந்துகொள்கிறோம். நீதியான விசாரணை இடம்பெறும் என்று ஒரு பக்கம் உறுதியளிக்கும் ஜனாதிபதி மறுபக்கம் செம்மணி வழியாகவே செல்கிறார், மனிதப் புதைகுழி அகழ்வுகள் நடக்கும் இடத்தைக் கண்டுகொள்ளாமலே…
(இது வரைக்கும் 200ஐத் தாண்டிய மனித எச்சங்கள் – இன்றும் குழந்தையொன்றின் எலும்புக்கூடும்..)
அவருடன் யாழ்ப்பாணம் வந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பிரதியமைச்சர் ஆகியோரும் இருக்க, நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற்று அந்த இடத்துக்குச் சென்று வந்திருந்தால், அது தான் சொல் அல்ல செயலே என்பதை நிரூபிப்பதாக இருக்கும்.
அதேபோல செம்மணி அகழ்வின் சான்றுப்பொருட்களையும் மனித எச்சங்களையும் இனவாதத்தோடு கேலிசெய்யும் பேரினவாதிகளைக் கண்டிப்பதாகவும் அமைந்திருக்கும்.
கச்சதீவுக்கு சென்று ‘படம்’ காட்டிய ஆர்வத்தின் ஒரு 10 வீதத்தைத் தானும் இதில் வெளிப்படுத்தவில்லை தோழர் ஜனாதிபதி அநுர.
அவர் செய்வதெல்லாமே சரி என்று முட்டுக்கொடுக்கும் நம் திடீர் தோழர்கள் மத்தியில், அறமும் நேர்மையும் கொண்ட, சில தெற்கின் சிங்கள, ஆங்கில ஊடகங்களின் கார்ட்டூன்கள் இன்று சுட்டிக்காட்டியவை
#presidentAKD #Jaffna #PresidentinJaffna #Chemmani #JaffnaCricketStadium
![]()