உலகம்

பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநர் லிசா குக் பதவி நீக்கம்; டிரம்பிற்கு எதிராக வழக்கு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,பெடரல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் லிசா குக்கை திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார். லிசா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், தன்னை பதவி நீக்கம் செய்த அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக லிசா குக் அறிவித்துள்ளார். அவரது வழக்கறிஞர் அபே லோவெல், “மத்திய வங்கி ஆளுநரை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை. ஒரு பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் அவரை நீக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சியில் எந்த சட்ட அடிப்படையும் இல்லை. இந்த சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம், அமெரிக்க அரசியலிலும் நிதி உலகிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மைய வங்கி ஆளுநர்கள் அரசியல் தலையீடுகள் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பது முக்கியமானது. டிரம்பின் இந்த நடவடிக்கை, பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *