உலகம்

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையும் முடிவை கைவிட வேண்டும் – ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்விடயம் சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையும் முடிவை கைவிட வேண்டும், டொன்பாஸ் பிராந்தியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்.

உக்ரைனில் இருக்கும் மேற்கிந்திய படைகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று 3 நிபந்தனைகளை ரஷ்யா விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாஸ்கோவில் அமைதி பேர்ச்சுவார்தை நடத்தும் ரஷ்யாவின் யோசனையை உக்ரைன் நிராகரித்த நிலையில், புட்டினின் நிபந்தனைளை ஏற்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளும், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *