உலகம்

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்ததாக அமெரிக்க துணை ஜனாதிபதி விளக்கம்

ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்ததாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

ரஷ்யா-உக்ரைன் இடையிலான மோதல் விரைவில் முடிவடைவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கடந்த சில வாரங்களில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியா மீது ட்ரம்ப் 2ஆவது கட்ட வரி விதிப்பை மேற்கொண்டார்.

தீவிர பொருளாதார நெருக்கடி தரும் வழிமுறைகளை ட்ரம்ப் பயன்படுத்தியுள்ளார்.

இது ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தக வருவாயை குறைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை ஆகும்.

கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தொடர்ந்து ரஷ்யா தனிமைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *