பலதும் பத்தும்

வாயை திறந்தபடி தூங்குவது நோயின் அறிகுறியா?

ஒவ்வொருவரும் தூங்கும் போது தனித்தனியான பழக்கவழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.

சிலர் தடிமனான தலையணையை வைத்து தூங்குவார்கள். சிலர் மெல்லிய தலையணையில் தூங்க விரும்புவார்கள்.

வானிலை எப்படியிருந்தாலும், சிலரால் போர்வை இல்லாமல் தூங்க முடியாது. சிலருக்கு அப்படி தூங்க பிடிக்காது.

ஆனால் நன்றாக தூங்கத் தொடங்கிவிட்டால், நம்மால் பல விஷயங்களைக் கவனிக்க முடியாது.

அதில் ஒன்று தான் வாயைத் திறந்து கொண்டு தூங்குவது.

தூங்கும் போது உங்கள் வாய் திறந்தே இருக்கிறதா? யாராவது உங்களிடம், ‘நீ தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருப்பாய்’ என்று சொன்னதுண்டா?

அப்படியானால், தூக்கத்தில் வாயைத் திறந்து வைத்திருப்பதற்கு காரணம் என்ன? அது எதைக் குறிக்கிறது? இது ஏதேனும் உடல்நல அபாயங்களையும் சுட்டிக்காட்டுகிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

தூக்கத்தின் போது வாயைத் திறந்துகொண்டே தூங்குதல்

பல நேரங்களில், கடினமான வேலைகளைச் செய்யும்போது, மக்களுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதற்காக, அவர்கள் மூக்கு மட்டுமல்லாமல் வாய் வழியாகவும் சுவாசிக்கிறார்கள்.

ஓடும்போது அல்லது கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும்போது, மக்கள் வாய் வழியாக மூச்சு வாங்குவதைக் காணலாம்.

ஆனால், பொதுவாக தூங்கும்போது, நம் கண்களைப் போலவே வாயும் மூடியிருக்கும்.

தூக்கத்தில், நாம் மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். நிம்மதியான நிலையில் இருப்பதால், வேகமாக சுவாசிக்க வேண்டிய தேவை இருப்பதில்லை.

ஆனால் தூங்கும்போது பலருடைய வாய் திறந்தே இருக்கும். அப்போது, அவர்கள் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள்.

இதற்கான காரணத்தை அறிய, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) நுரையீரல், தீவிர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவத் துறையின் மருத்துவர் விஜய் ஹட்டாவிடம் பேசினோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *